"எல்லோரும் அஜித் ஆகிட முடியுமா..?" - புல்லட்டில் ட்ரிஃப்ட் செய்யும் போது விழுந்து வாரிய இளம் நடிகை..!


ஷ்ரத்தா ஸ்ரீநாத் கன்னடத்தில் யுடன் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தான் சமந்தா தமிழில் ரீமேக்கில் நடித்தார். மேலும் இவர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான ‘காற்று வெளியிடை’ படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

அதன் பிறகு கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற இவன் ‘தந்திரன்’ திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம் வேதா.

இந்த திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் நன்கு பெயர் பெற்றார் தற்போது இவர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில்முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "இந்திய படங்களில் தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்தால் நிச்சயம் புல்லட் ஓட்டுவது போன்ற காட்சி இருக்க வேண்டும்.." என்று புல்லட் ஒன்றை எடுத்து ஓட்ட முயற்சி செய்து யூ-டர்ன் போட்டு வளைந்து செல்ல முயற்சித்த போது தவறி கீழே விழுந்து விட்டார்.

இதனை பார்த்து சுதாரித்து கொண்ட அவரது நண்பர்கள் அவரை துரிதமாக மீட்டனர். இதனை பார்த்த ரசிகர்கள், எல்லோரும் என்னை அறிந்தால் அஜித் ஆகிட முடியுமா.? என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ,"எல்லோரும் அஜித் ஆகிட முடியுமா..?" - புல்லட்டில் ட்ரிஃப்ட் செய்யும் போது விழுந்து வாரிய இளம் நடிகை..! "எல்லோரும் அஜித் ஆகிட முடியுமா..?" - புல்லட்டில் ட்ரிஃப்ட் செய்யும் போது விழுந்து வாரிய இளம் நடிகை..! Reviewed by Tamizhakam on July 24, 2020 Rating: 5
Powered by Blogger.