"கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப கவர்ச்சி காட்டுறீங்க.." - எருமசாணி ஹரிஜா வெளியிட்ட புகைப்படம் குறித்து ரசிகர்கள் கருத்து..!


யூடியூப் சேனலின் மூலமாக பிரபலமானவர் தான் ஹரிஜா. இவர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் அதுமட்டுமில்லாமல் தற்போது சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் சென்னையில் தங்கி உள்ளார்.

இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார். அதன் பிறகாக எருமசாணி எனும் யூடியூப் சேனலில் நடித்துள்ளார். இவரின் “போடா எரும சாணி கிறுக்கு பயலே” என்று சொல்லும் டயலாக் ஆனது ரசிகர் மத்தியில் மிகவும் வைரலாக பரவியது.

அதுமட்டுமில்லாமல் மிக அதிக பார்வையாளரை கவர்ந்த யூட்யூப் சேனல்களில் இந்த சேனலும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த யூடியூப் சேனலில் விஜயும் ஹரிஜாவும் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிகர்களை எளிதில் கவர்ந்தது இதனால் இந்த யூடியூப் சேனல் ஆனது மிக வேகமாக ரசிகர்களிடையே பிரபலமானது.

மேலும் சினிமாவில் ஒரு நடிகர் உள் நுழைவதற்கு பல கஷ்டங்களை பட்டுள்ளேன் என பல முன்னணி நடிகர்கள் கூறியுள்ளார்கள். அந்த வகையில் எந்த ஒரு கஷ்டமும் இன்றி யூடியூப் சேனலில் மூலமாக சினிமாவுக்கு ஈசியாக உள்ளே நுழைந்தவர்கள் இவர்கள்தான்.

இந்த எருமசாணி சேனலின் கதாநாயகி ஹரிஜா தற்போது ஒரு சில திரைப்படங்களிலும் தன் முகத்தை காட்ட ஆரம்பித்து விட்டார். அதுமட்டுமில்லாமல் தற்போது லீடு ரோலில் “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” என்ற திரைப்படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் துருதுருவென இருக்கும் ஹரிஜா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், புடவை சகிதமாக ஒரு புகைப்படம், கவர்ச்சியான கவுன் போன்ற உடையில் ஒரு புகைப்படம் என இரண்டையும் ஒப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் கல்யாணத்துக்கு பிறகு ரொம்ப கவர்ச்சி காட்டுறீங்க..? என்று கேட்டு வருகிறார்கள்.