நடிகர் கமல்ஹாசன் மீது மீரா மிதுன் வைத்த அதிர்ச்சி குற்றசாட்டு - பரபரப்பு தகவல்..!


சோசியல் மீடியாவில் தொடர்ந்து சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத விஷயங்களை பகிர்ந்து வரும், நடிகையும், பிரபல மாடலுமான மீரா மீதுன், தற்போது த்ரிஷா பற்றி வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரையுலகில் தான், நெப்போலிடிசம் அதிகம் உள்ளது, இதனால் திறமை இருக்கும் பல பிரபலங்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுவதாகவும், நடிகர் சுஷாந்த் தற்கொலைக்கும் இது தான் காரணம் என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது கோலிவுட் திரையுலகில் சாதி ரீதியாகவும், அதனால் த்ரிஷா போன்றவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை மீரா மிதுன்.

இந்த ஜாதியுடன் கூடிய நெப்போடிசம் ஒழிய வேண்டும் என்றால் இன்னொரு பெரியார் பிறந்துதான் இதை மாற்ற வேண்டுமென்றால், பெரியாரின் வழியை பின்பற்றும் நானே உருவெடுத்து இதை கண்டிப்பாக மாற்றி காட்டுவேன் என ஆக்ரோஷமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.


இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனை சர்ச்சைக்குள் இழுத்து விட்டுள்ளார் மீரா மிதுன். அவர் கூறியுள்ள பதிவில், ஜல்லிக்கட்டு விவகாரத்தின் போது திரிஷாவை ஒட்டு மொத்த தமிழகமும் எதிர்த்து. அப்போது, கமல்ஹாசன் ஆளுக்கு முன்னர் வந்து திரிஷாவுக்கு ஆதரவாக பேசினார்.

காரணம், கமல்ஹாசன் ஒரு பிராமணர் , திரிஷாவும் ஒரு பிரமாணர் என்பதால் தான். நான் பிரமாணனரல்லாத பெண் என்பதால் பிக் பாஸ் வீட்டில் எனக்கு நீதி மறுக்கப்பட்டது. என்று கமல்ஹாசன், த்ரிஷா இருவரது ஜாதியையும் குறிப்பிட்டு பேசி பரபரப்பை கிளப்பி விட்டுள்ளார்.

இவருக்கு ஆதரவாக யாருமே பேசாத நிலையில், தற்போது ஈ.வே.ராமாசாமியின் கருத்துகளை எடுத்துக்கொண்டு பிரமான எதிர்ப்பு பேசி கருப்பு சட்டை காரர்களின் ஆதரவை பெரும் முனைப்பில் இருக்கிறார் மீரா மிதுன்.

மேலும், சமீபத்தில் திமுக இளைஞர் அணி தலைவரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினை மீரா மிதுன் சந்தித்தார் என்பதும், அதன் பிறகு தான் இப்படியான ஈ.வே.ராமசாமி.. பிராமணர் எதிர்ப்பு போன்றவற்றை உமிழ்ந்து வருகிறார் மீரா மிதுன் என்பது குறிப்பிடத்தக்கது.

இது கமல்ஹாசன் மீதான அரசியல் தாக்குதலாகவும் கமல்ஹாசன் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

நடிகர் கமல்ஹாசன் மீது மீரா மிதுன் வைத்த அதிர்ச்சி குற்றசாட்டு - பரபரப்பு தகவல்..! நடிகர் கமல்ஹாசன் மீது மீரா மிதுன் வைத்த அதிர்ச்சி குற்றசாட்டு - பரபரப்பு தகவல்..! Reviewed by Tamizhakam on July 29, 2020 Rating: 5
Powered by Blogger.