வாணி ராணி, அரண்மனை கிளி சீரியலில் நடித்த இளம் நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்..! - இரவு முழுதும் கதறி அழுத சோகம்..!


கோவிட்19 தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 75 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

இறப்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேளையில் குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. கொரோனா வைரஸ் குறித்த புரிதலுடன் வீட்டில் மற்றும் முக்கியமான காரணங்களுக்கு மட்டும் வெளியில் சென்று வந்தால் நாம் நோய் தொற்றில் இருந்து எஸ்கேப் ஆகிவிடலாம்.

தற்போது வரை இந்தியாவில் 17,400 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சினிமா துறை முற்றிலும் இந்த வைரஸ் பரவல் காரணமாக முடக்கப்பட்டு உள்ளது. அதிக நபர்கள் ஒன்று கூடினால் வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளது என்பதால் சினிமா படங்களின் ஷூட்டிங் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை.

ஆனால், சீரியல் சூட்டிங்கை நடத்த அனுமதி வேண்டும் என போராடிய சின்னதிரையினர்  கோரிக்கையை ஏற்று மிகக்குறைந்த நபர்களைக் கொண்டு சீரியல்களின் ஷூட்டிங் நடத்த இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் அனுமதி அளித்துள்ளன.

இந்நிலையில், வாணி ராணி, அரண்மனை கிழி உள்ளிட்டா சீரியல்களில் நடித்துள்ள நடிகை ஷூட்டிங்கில் பங்கேற்று வந்த முன்னணி சீரியல் நடிகை நவ்யா சாமி கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு சில கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் உடனே கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று பாசிட்டிவ் என வந்துள்ளது.

இது பற்றி அவர் கூறியிருப்பதாவது.. "ஆம் எனக்கு கொரோனா பாசிட்டிவ். நேற்று தான் ரிப்போர்ட் வந்தது. நான் செய்த முதல் விஷயம் ஷுட்டிங்கை நிறுத்துவது தான். நான் கொரோனாவை பரப்புபவர் ஆக இருக்க விரும்பவில்லை." "எனக்கு கடந்த மூன்று நான்கு நாட்களாக உடல் சோர்வு மற்றும் தலைவலி இருந்தது.

என் மருத்துவர் கூறிய அறிவுரையின் அடிப்படையில் நான் கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொண்டேன். தற்போது என்னுடைய ரூமில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தற்போது எந்த அறிகுறிகளும் இல்லை. நேற்று இரவு நான் கதறி அழுதேன். இன்று காலை வரை அழுதேன். என்னால் தூங்கவே முடியவில்லை.

என் அம்மா இன்னும் அழுது கொண்டிருக்கிறார். என் போன் பிஸியாகவே இருக்கிறது. பலர் என்னுடன் பேசுகிறார்கள். வாட்ஸ்அப்பில் அதிக மெசேஜ்களை வருகின்றன. நான் என்னுடைய சக நடிகர்களை பிரச்சனையில் சிக்க வைத்துள்ளேன் என்பதை நினைத்து குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன்.

என்னுடைய சேனல் தயாரிப்பாளர்கள் மற்றும் சக நடிகர்கள் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்கள் என்னுடன் இருப்பதாக உறுதி அளித்துள்ளனர். இந்த சமயத்தில் இதைவிட வேறென்ன கேட்க முடியும்.

ஆனாலும் எனக்கு வைரஸ் தாக்குதல் வந்துள்ளது" என தெரிவித்துள்ளார். மேலும் தன்னை பற்றி பரவி வரும் பல வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். "நான் வேண்டுமென்றே நோயை பரப்புவதற்காக இப்படி செய்ததாக சிலர் வதந்தி பரப்புகிறார்கள். நான் ஏன் அப்படி செய்யப் போகிறேன்? நான் ஷூட்டிங் செய்யும் போது எந்த அறிகுறிகளும் இல்லை.

எனக்கு சில அறிகுறிகள் தெரிந்தவுடன் நான் டெஸ்ட் செய்து கொண்டேன். இந்த வைரஸ் எனக்கு எப்படி தொற்றி கொண்டது என்பது எப்படி தெரியும். எனக்கு பாசிட்டிவ் என்பதால் இப்படி சர்ச்சை ஏற்படுத்தாதீர்கள்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாணி ராணி, அரண்மனை கிளி சீரியலில் நடித்த இளம் நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்..! - இரவு முழுதும் கதறி அழுத சோகம்..! வாணி ராணி, அரண்மனை கிளி சீரியலில் நடித்த இளம் நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்..! - இரவு முழுதும் கதறி அழுத சோகம்..! Reviewed by Tamizhakam on July 01, 2020 Rating: 5
Powered by Blogger.