அடுத்த கட்டத்திற்கு செல்லும் "நடிகர் உதயநிதி - மான் கறி" விவகாரம் - விஸ்வரூபம் எடுக்கும் சர்ச்சை..! - பரபரப்பு தகவல்கள்


கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன், நிலத்தகராறு வழக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்டார். இதயவர்மன் வைத்திருந்த துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி இவர் திருப்போரூர் பகுதியில் உள்ள மான்களை வேட்டையாடினார் என்ற சர்ச்சை எழுந்தது. அந்த மான்கறிகளை நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த பகுதியை சேர்ந்த ஒரு நபரை பேட்டி எடுத்து யூடியூப் சேனலில் வீடியோ பதிவிட்டிருந்தார் மதன் ரவிச்சந்திரன்.

மேலும், இது தொடர்பாக வழக்கு தொடர்வதாக இருந்தாலும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடரலாம். எந்த வழக்காக இருந்தாலும் அதனை சந்திக்க நான் மற்றும் பேட்டி கண்ட அந்த நபர் தயாராக  இருக்கிறோம் என அறிவித்திருந்தார் பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன்.

இந்நிலையில், மான்கறி விவாகரத்தில் தற்போது இந்த வீடியோவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். அவர் வழங்கிய அந்த மனுவில், தன்னைப் பற்றி உண்மைக்குப் புறம்பாக மக்கள் மத்தியில் அவதூறு செய்தி பரப்பும் மதன் ரவிச்சந்திரன் மீது இந்திய தண்டனை சட்டம், அவதூறு சட்டப் பிரிவின் கீழ் விசாரித்து, தண்டனை வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு வாரமாக மௌனம் காத்து விட்டு இப்போது எதற்கு வழக்கு தொடர்ந்தார். இரண்டு வாரமாக என்ன செய்தார் என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் பறந்து வருகின்றன.

எது எப்படியோ.. விசாரணை தொடங்கிய பிறகு மான்கறி நடிகர் உதயநிதிக்கு சப்ளை செய்யப்பட்டதா..? நிஜமாகவே மான் வேட்டை நடந்ததா..? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என நம்பலாம்.

அடுத்த கட்டத்திற்கு செல்லும் "நடிகர் உதயநிதி - மான் கறி" விவகாரம் - விஸ்வரூபம் எடுக்கும் சர்ச்சை..! - பரபரப்பு தகவல்கள் அடுத்த கட்டத்திற்கு செல்லும் "நடிகர் உதயநிதி - மான் கறி" விவகாரம் - விஸ்வரூபம் எடுக்கும் சர்ச்சை..! - பரபரப்பு தகவல்கள் Reviewed by Tamizhakam on July 29, 2020 Rating: 5
Powered by Blogger.