Posts

Showing posts with the label Udhayanidhi

சிக்கிய அந்த ஆதாரம்.. உதயநிதியை நெருங்கிய ED.. தலைகீழாகும் அரசியல் களம்!

Image
தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை முறைப்படுத்தி நடத்தி வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) தொடர்பான ரூ.1000 கோடி ஊழல் குற்றச்சாட்டு, தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறையின் (ED) தீவிர விசாரணை, முக்கிய நபர்களாகக் கருதப்படும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் ரத்தீஷ் ஆகியோரை மையப்படுத்தி நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையானது, தமிழக அரசின் உயர் மட்ட அரசியல் தலைவர்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படுவதால், இதன் அரசியல் தாக்கங்கள் குறித்த விவாதங்கள் உச்சத்தை எட்டியுள்ளன. டாஸ்மாக் ஊழல்: விவகாரத்தின் பின்னணி டாஸ்மாக் நிறுவனம், தமிழ்நாட்டில் மதுபானங்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் முழு ஏகபோக உரிமையைப் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் மூலம் மாநில அரசுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இருப்பினும், மதுபான கொள்முதல், விற்பனை மற்றும் இடமாற்றங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, அமலாக்கத் த...

அடுத்த கட்டத்திற்கு செல்லும் "நடிகர் உதயநிதி - மான் கறி" விவகாரம் - விஸ்வரூபம் எடுக்கும் சர்ச்சை..! - பரபரப்பு தகவல்கள்

Image
கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன், நிலத்தகராறு வழக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்டார். இதயவர்மன் வைத்திருந்த துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி இவர் திருப்போரூர் பகுதியில் உள்ள மான்களை வேட்டையாடினார் என்ற சர்ச்சை எழுந்தது. அந்த மான்கறிகளை நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த பகுதியை சேர்ந்த ஒரு நபரை பேட்டி எடுத்து யூடியூப் சேனலில் வீடியோ பதிவிட்டிருந்தார் மதன் ரவிச்சந்திரன். மேலும், இது தொடர்பாக வழக்கு தொடர்வதாக இருந்தாலும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடரலாம். எந்த வழக்காக இருந்தாலும் அதனை சந்திக்க நான் மற்றும் பேட்டி கண்ட அந்த நபர் தயாராக  இருக்கிறோம் என அறிவித்திருந்தார் பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன். இந்நிலையில், மான்கறி விவாகரத்தில் தற்போது இந்த வீடியோவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். அவர் வழங்கிய அந்த மனுவில், தன்னைப் பற்றி உண்மைக்குப் புறம்பாக மக்கள் மத்தியில் அவதூறு செய்தி பரப்பும் மதன் ரவிச்சந்திரன் மீது இந்திய தண்டனை சட்ட...

தங்ககடத்தல் கும்பலுடன் தொடர்பு..? - நடிகர் உதயநிதி ஸ்டாலின் பட தயாரிப்பாளர் பதில்..!

Image
கடந்த இரண்டு வாரங்களாக கேரளாவையே உலுக்கி வருகிறது தங்க கடத்தல் மோசடியும் அதன் பின்னியில் உள்ள கும்பல் கைதுகளும். இந்த விவாகரம் மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. இந்தநிலையில், மலையாளத்தில் டொவினோ தாமஸ் - ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்த மாயநதி படத்தின் தயாரிப்பாளர் சந்தோஷ் டி.குருவில்லா தங்க கடத்தல் கும்பலிடம் இருந்து பணம் பெற்றுத்தான் மாயநதி படத்தை தயாரித்தார் என சோஷியல் மீடியாவிலும் சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இவர் தான் தமிழில் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த "நிமிர்" படத்தையும் தயாரித்தவர்.ஆனால் இந்த செய்தியில் உண்மையில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார் சந்தோஷ் குருவில்லா. இந்நிலையில், இந்த தகவல் குறித்து சந்தோஷ் குருவில்லா கூறுகையில், இந்தப்படத்திற்காக செலவு செய்த ஒவ்வொரு காசும் எனது வங்கிக்கணக்கு மூலமாக செலவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முறையான வரியும் கட்டியிருக்கிறேன். இப்படி ஒரு செய்தியை யார் பரப்பினார்கள். இதில் என்னை கோர்த்து விடுவதால் யாருக்கு என்ன லாபம் என்றுதான் புரியவில்லை என காட்டமாக கூறியுள்ளார் சந்தோஷ் டி.குருவில்லா. கேரளாவை...

உதயநிதிக்கு ஜோடியாகும் "பேட்ட" பட நடிகை..!

Image
அரசியல் வாரிசான உதயநிதி நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய பட பேட்ட பட நடிகை ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  நடிகர் என்பதை தாண்டி தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் மற்றும் தி.மு.க இளைஞர் அணி செயலாளாளர் என்ற பொறுப்பிலும் உள்ளார் உதயநிதி.இவர் இரெட் செயன்டு மூவிசு என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாக நடத்தி வருகிறார்.  தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள அவர் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும் போது, கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்துள்ள ஐந்து பவுன் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அடுத்து வரப்போவது நம்ம ஆட்சி தான். அதனால், சீக்கிரம் போய் அடகு வைங்க என்று பேசியது எல்லாம் உச்ச கட்டம்.  2021-ல் எப்படியும் ஆட்சியை பிடித்து விடுவது என குறிக்கோளுடன் இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இது ஒருபுறமிருக்க, சினிமாவிலும் தனது பயணத்தை தொடர்கிறார். தான் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் பேட்ட படத்தில் நடித்த இளம் நடிகை மேகா ஆகாஷ் ஜோடியாக நடிக்கவுள்ளார்.  கவுதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மூலம் அறிமுக...