"இதன் பெயரால் என்னை கொன்று விட்டார்கள்" - சுஷாந்த் ஆவியுடன் பேசிய நபர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!


ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் கடந்த மாதம் மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணம் திரைப்பட ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பாலிவுட்டில் உள்ள சினிமா வாரிசு அரசியல் தான்அவரது தற்கொலைக்குக் காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டினர். அது குறித்த வழக்கு விசாரணையை மும்பை போலீஸ் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஸ்டீவ் ஹப் என்பவர் சுஷாந்த் சிங் ஆவியுடன் பேசியதாக இரண்டு பாகங்களைக் கொண்ட வீடியோவை யு-டியுபில் வெளியிட்டுள்ளார். அதில் இடம் பெற்றுள்ள சுஷாந்த் ஆவி என்று சொல்லப்படக் கூடிய குரல் சுஷாந்த் சிங் குரல் போலவே உள்ளதாக ரசிகர்கள் அந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் பதிவிட்டுள்ளனர்.

“நான் நன்றாக இருக்கிறேன், சில ஆண்களுடன் பெரிய வாக்குவாதம் நடந்தது, அவர்கள் நகங்களைக் கொண்டு வந்தார்கள், அது இப்போது முடிந்தது. நட்பு என்ற பெயரால் என்னை கொலை செய்து விட்டார்கள். நாம் இத்துடன் நிறத்திக்கொள்வது சிறந்தது” என தன் கேள்விகளுக்கு சுஷாந்த் ஆவி பதிலளித்ததாக ஸ்டீவ் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.இந்த வீடியோவால் தற்போது ரசிகர்களிடம் மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


"இதன் பெயரால் என்னை கொன்று விட்டார்கள்" - சுஷாந்த் ஆவியுடன் பேசிய நபர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..! "இதன் பெயரால் என்னை கொன்று விட்டார்கள்" - சுஷாந்த் ஆவியுடன் பேசிய நபர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..! Reviewed by Tamizhakam on July 19, 2020 Rating: 5
Powered by Blogger.