பிரபாஸ் பாகுபலிக்கு பிறகு இந்தியாவே வியக்கும் நடிகர் ஆகிவிட்டார். இவர் தற்போது பல மொழி படங்களில் தான் நடிக்கின்றார். தற்போது 500 கோடி செலவில் எடுக்கப்படும் "ஆதிபுருஷ்" என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் போஸ்டர் பார்க்கும் போது ராமயணம் கதையை தான் பிரபாஸ் படமாக நடிக்கவுள்ளார் என தெரிகிறது. இப்படத்தின் இயக்குனர் தான் சமீபத்தில் வெளியாகி ரூ 350 கோடி வசூல் செய்த 'தன்ஹாஜி' என்ற படத்தை இயக்கியவர்.
இந்த பர்ஸ்ட் லுக் இந்திய முழுவதும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும் பிரபாஸ் தற்போது நடித்து வரும் அனைத்து படங்களுமே மல்டி லாங்குவேஜ் படங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 'தன்ஹாஜி' இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்கவுள்ளார்.
இந்தாண்டு ஜனவரி 10-ம் தேதி வெளியான படம் 'தன்ஹாஜி'. அஜய் தேவ்கான் நாயகனாக நடித்த இந்தப் படத்தை ஓம் ராவத் இயக்கியிருந்தார். வசூல் ரீதியாக பெரும் வரவேற்புப் பெற்ற இந்தப் படத்தை அஜய் தேவ்கான், பூஷண் குமார் மற்றும் கிஷண் குமார் இணைந்து தயாரித்து வெளியிட்டார்கள்.
தற்போது ஓம் ராவத் இயக்கவுள்ள அடுத்த படத்தையும் டி-சீரிஸ் நிறுவனத்தின் பூஷண் குமாரே தயாரிக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபாஸ்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது. 'ஆதிபுருஷ்' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படம் 3டி-ல் உருவாகிறது. இந்தியில் உருவாக்கப்பட்டு, இதர மொழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளது.
இந்தப் படத்துக்கான போஸ்டரை வைத்துப் பார்த்தால், இது 'ராமாயணம்' கதையில் இருந்து ஒரு பகுதியை படமாக்கவுள்ளதாக தெரிகிறது. இது போன்ற படங்களில் நடிக்க தமிழ் நடிகர்கள், ரசிகர்கள் முன்வர வேண்டும்.
ஆனால், இங்கே சாதி பற்றி பேச மட்டுமே இயக்குனர்கள் இருக்கிறார்கள். அந்த சாதிகாரன் இப்படி பண்ணான், இந்த சாதிக்காரன் இப்படி பண்ணான் என்று குறிப்பிட்ட சமூகத்தினர் மீது வன்மம், வெறுப்பு ஏற்படும் படியான படங்களை சமூக நீதி படங்கள் என்ற பெயரில் தருகிறார்கள்.
இந்த நடைமுறை ஒழிந்து ஒற்றுமையையும், மதநல்லிணக்கத்தையும் போதிக்கும் படங்கள் வெளி வர வேண்டும் என்பது பொதுவான தமிழ் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.




