"சினிமா வாழ்கையில இதெல்லாம் சாதரணமப்பா..." - தீயாய் பரவிய தகவல் - கூல் ப்ரியா ஆனந்த்..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் பெரும்பாலாக படங்களில் ஒரு நல்ல கதாப்பாத்திரத்துக்காக நடிப்பதில்லை.பெரும்பான்மையான நடிகைகள் வெறும் கவர்ச்சிப்பொருளாகவே இருக்கின்றனர்.

அவ்வப்போது சில திரைப்படங்கள் தமிழ் சினிமா நடிகைகளின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக வெளிவந்து மக்களை ரசிக்க வைக்கிறது.நடிகை பிரியா ஆனந்த் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக இருந்தாலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற போராடி வரும் ஒரு நடிகை.

இவரது நடிப்பில் கடைசியாக துருவ் விக்ரம் நடித்த “ஆதித்ய வர்மா” படம் வெளியாகி இருந்தது. அப்படத்தை தொடர்ந்து நடிகையின் நடிப்பில் என்ன படம் வெளியாகிறது என்பது தெரியவில்லை.

1986-ம் ஆண்டு சென்னையில் பிறந்த பிரியா ஆனந்த், அமெரிக்காவின் புகழ்பெற்ற அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டப்படிப்பை முடித்தார்.2009 -ம் ஆண்டு வெளிவந்த 'வாமணன்' படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் பிரியா ஆனந்த்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பிரியா ஆனந்த்.இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.எதிர் நீச்சல், 180, எல்கேஜி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார் பிரியா ஆனந்த்.

ஸ்ரீதேவி நடித்த 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் படங்களில் அவ்வளவாக கவர்ச்சி காட்டாத இவரின் சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சிவகார்த்திகேயன், அதர்வா, 'மிர்ச்சி' சிவா, ஆர்.ஜே.பாலாஜி போன்றோருடன், ஆரம்பகால படங்களில் நடித்தவர் நடிகை ப்ரியா ஆனந்த்.

பெரிய ஹீரோக்களின் படங்களை, இவர் அதிகம் எதிர்பார்ப்பது இல்லை. அதர்வா, கவுதம் கார்த்திக் போன்றோருடன் கிசுகிசுக்கப்பட்ட இவர், இது குறித்து கூறுகையில், ''இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே. சினிமாவில் இப்படி கிளப்பி விடுவது சாதாரணமப்பா,'' என, கூலாக பதிலளித்தார்.

"சினிமா வாழ்கையில இதெல்லாம் சாதரணமப்பா..." - தீயாய் பரவிய தகவல் - கூல் ப்ரியா ஆனந்த்..! "சினிமா வாழ்கையில இதெல்லாம் சாதரணமப்பா..." - தீயாய் பரவிய தகவல் - கூல் ப்ரியா ஆனந்த்..! Reviewed by Tamizhakam on August 06, 2020 Rating: 5
Powered by Blogger.