"மெர்சல்" படத்திலிருந்து விலகியது ஏன்..? - போட்டு உடைத்த நடிகை ஜோதிகா..!


அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் ‘மெர்சல்’ இந்தப் படம் கடந்த 2017-ம் வருடம் தீபாவளி அன்று வெளியானது. தமிழகம் முழுவதும் இல்லாமல் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

கூடவே மாபெரும் வசூலையும் ஈட்டியது. நடிகர் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் அளவுக்கு பெரும் சாதனையை செய்த படம் இல்லை என பலரும் கூறியிருந்தனர். 

லண்டன் பெஸ்ட் வெளிநாட்டு மொழிக்காளுக்கான திரைப்படம் விருதினையும் இது தட்டி சென்றது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கிய பாலமாக அமைந்த படம் "மெர்சல்" அட்லீ இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

மெர்சல் படத்தில் அழகான மனைவியாக நடித்து ரசிகர்களின் உள்ளங்கைகளை வெகுவாக கவர்ந்த நடிகை நித்யமேனனுக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. 

ஆனால் இந்த ரோலில் நடிக்க நடிகை ஜோதிகாவுக்கு தான் முதலில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் நான் இந்த ரோலில் நடிக்கமாட்டேன் என நிராகரித்துவிட்டார். 

இதனால் பலரும் அவரை விமர்சித்து வந்தனர். தற்போது இதற்கான காரணத்தை நடிகை ஜோதிகா பேட்டி ஒன்றி கூறியுள்ளார், அதாவது "படத்தின் ஸ்கிரிப்ட் பற்றி எனக்கும் இயக்குனருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு தான் காரணம். அதனால் படத்தில் இருந்து விலகிவிட்டேன். என் கதாபாத்திரத்தின் மீது இருந்த Creative Difference மட்டும் தான் காரணமே தவிர வேறு எதுவும் இல்லை" என ஜோதிகா கூறியுள்ளார்.

"மெர்சல்" படத்திலிருந்து விலகியது ஏன்..? - போட்டு உடைத்த நடிகை ஜோதிகா..! "மெர்சல்" படத்திலிருந்து விலகியது ஏன்..? - போட்டு உடைத்த நடிகை ஜோதிகா..! Reviewed by Tamizhakam on August 18, 2020 Rating: 5
Powered by Blogger.