"சுப்ரமணியபுரம் சுவாதியா இது..? - என்ன இப்படி ஆகிட்டாங்க..?" - புலம்பும் ரசிகர்கள் - வைரல் புகைப்படங்கள்..!


தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகை சுவாதி ரெட்டி, சசிகுமார் நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

தொடர்ந்து, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலதெலுங்கு படங்களின் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமானவர் சுவாதி ரெட்டி, பின்னர் சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்த சுவாதி ரெட்டி, மலையாள சினிமா உலகிலும் பல படங்களில் நடித்துள்ளார். 

கடந்த ஆண்டு சுவாதி நடிப்பில் திரிச்சூர் பூரம் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.குமாரா, யட்சன், யாக்கை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.கேரளாவை சேர்ந்த விமான பைலட் விகாஸ் வாசுவை காதலித்து வந்தார் சுவாதி ரெட்டி. 

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருடன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார். சமீபத்தில், கணவருடன் பிரச்சனை என்றும், இன்ஸ்டாகிராமில் அவருடன் இருந்த புகைப்படங்களை டெலிட் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சமூக வலைதளங்களான ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தான் இல்லை என்றும், தனது பெயரில் வலம் வரும் போலி கணக்குகள் குறித்த தகவல் தனக்கு கிடைத்ததாகவும், அதனால், மிகுந்த அப்செட் ஆனதால், இந்த பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுகிறேன். 


அந்த ஃபேக் ஐடிக்களை யாரும் பின் தொடர வேண்டாம், என்றும் இவங்களுக்கு ஏன் இந்த பொழப்பு என்றும் கேட்டுள்ளார்.ட்விட்டரில் தான் இதுவரை எந்தவொரு கணக்கும் தொடங்கவில்லை என்றும், ஃபேஸ்புக்கில் இருந்து 2011ம் ஆண்டே வெளியேறிவிட்டேன் என்றும் கூறிய நடிகை சுவாதி, இன்னும் ஏன் இன்ஸ்டாகிராமில் இருக்கிறேன் என்பது தனக்கே தெரியவில்லை என்று கூறியுள்ளார். 


ஒருவேளை இதுபோன்ற போலி கணக்குகள் குறித்த விளக்கம் அளிக்க இது இப்போது உதவி இருக்கிறது என்றும் சுவாதி கூறியுள்ளார். இந்நிலையில், இவரது சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.


வடகறி படத்தில் பொசு பொசுவென இருந்த இவர் இப்போது உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறி விட்டார். இதனை பார்த்த ரசிகர்கள், சுப்ரமணியபுரம் சுவாதியா இது..? என்ன இப்படி ஆகிட்டாங்க..? என்று புலம்பி வருகிறார்கள்.

"சுப்ரமணியபுரம் சுவாதியா இது..? - என்ன இப்படி ஆகிட்டாங்க..?" - புலம்பும் ரசிகர்கள் - வைரல் புகைப்படங்கள்..! "சுப்ரமணியபுரம் சுவாதியா இது..? - என்ன இப்படி ஆகிட்டாங்க..?" - புலம்பும் ரசிகர்கள் - வைரல் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on August 19, 2020 Rating: 5
Powered by Blogger.