இறப்பதற்கு சற்று முன்பு சுஷாந்த் சிங் கூகுளில் தேடிய ஒரு விஷயம்..! - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!


கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங். இவருக்கு 34 வயது தான். இவர் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொழில்போட்டி காரணமாக ஏற்பட்ட மனஅழுத்தத்தால் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின்பேரில் தற்கொலைக்கு தூண்டுதல், திருட்டு, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 6 பேர் மீது பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நடிகை ரியா சக்கரபோர்த்தி, சுஷாந்த் சிங் காதலி ஆவார்.சுஷாந்த் சிங் மரண வழக்கை விசாரிக்க மும்பை வந்துள்ள பாட்னா போலீசாருக்கு மும்பை போலீஸ் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் பீகார் அரசியல் தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது. மேலும், சுஷாந்திற்கு சொந்தமான ரூ 1.5 கோடி ரூபாய் அவருக்கு தெரியாமல் வேறொரு வங்கிக்கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாம்.

லேட்டாப், பணம், நகைகள், கிரெடிட் கார்டுகள் திருடப்பட்ட நிலையில் சுஷாந்தின் மரண அறிக்கைகளை வெளியிடுவதாகவும் கூறி ரியா தரப்பு மிரட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சுஷாந்த் கூகுள் தளத்தில் வலியில்லா மரணம், இருதுருவ நோய் என்னும் மனநல குறைபாடு, மனச்சிதைவு ஆகிய வார்த்தைகளை தேடியுள்ளதாக மும்பை காவல் துறை கூறியுள்ளது.