எட்டு தோட்டாக்கள்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தற்போது ’சர்வம் தாள மயம்’ படத்தில் ஜி.வி.பிரக்ஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை அபர்ணா முரளி. தற்போது சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிய இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதற்கிடையே, பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது, சூரரைப்போற்று படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கப் போகிறேன் என்பது முதலில் தெரியாது என்று நடிகை அபர்ணா பாலமுரளி கூறியுள்ளார். மேலும் அவர் அவர் கூறும்போது, சுதா கொங்கரா இயக்கும் படம் என்பது மட்டும் தான் எனக்குத் தெரியும்.
பிறகு ஆடிஷனின் தேர்வாகி, சூர்யா நடிக்கும் படம் என்று தெரிந்ததும் நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன். ஏனென்றால் 'காக்க காக்க' படத்தில் இருந்தே நான் அவரது ரசிகை. காக்க காக்க ’வெளியானபோது நான் 12-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
நான் எப்போதும் அவருக்கு ஒரு பெரிய ரசிகையாகவே இருப்பேன். இப்போது அவருடன் பணியாற்றுவது உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தார் அபர்ணா முரளி.
இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்துகொண்டிருகின்றன. ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நல்ல கதைகள் உள்ள படங்களில் நடிக்க விரும்புகிறார் அம்மணி.
தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இவருக்கு உண்டு என்கிறார்கள் சினிமா வட்டரதினர். இந்நிலையில், இவரது சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Tags
Aparna Balamurali