"உருக்காத வெண்ணெய் மாதிரி இருக்கீங்க... - பாரம்பரிய உடையில் அம்ரிதா அய்யர் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!


விஜய் ஜேசுதாஸ் உடன் இணைந்து படைவீரன் மற்றும் விஜய் ஆண்டனியின் காளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் அம்ரிதா அய்யர். 

ஆனால், அட்லி இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான விஜய்யின் பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிகில் படத்தின் மூலம் கிடைத்த பிரபலத்தைத் தொடர்ந்து நடிகை அம்ரிதா அய்யர், பிக்பாஸ் கவினுக்கு ஜோடியாக ஹாரர் திரில்லர் படமான லிஃப்டில் நடித்து வருகிறார். சமீபத்தில் அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி வைரலாகின. 

நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்திற்கு பிறகு கவினுக்கு கிடைத்துள்ள மற்றொரு வாய்ப்பு இது.பெங்களூரில் பிறந்து வந்த அம்ரிதா அய்யர் மலையாளத்தில் வெளியான பத்மவியூகம் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். 

தெனாலி ராமன், போக்கிரி ராஜா, தெறி உள்ளிட்ட படங்களில் சைடு ரோலில் நடித்து வந்த அம்ரிதா அய்யருக்கு படைவீரன் படத்தில் நாயகி ரோல் கிடைத்தது. மல்டி ஹீரோயின் சப்ஜெக்டாக வெளியான காளி படத்திலும் நடித்திருந்தார்.


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். 


அந்த வகையில், தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

"உருக்காத வெண்ணெய் மாதிரி இருக்கீங்க... - பாரம்பரிய உடையில் அம்ரிதா அய்யர் - வர்ணிக்கும் ரசிகர்கள்..! "உருக்காத வெண்ணெய் மாதிரி இருக்கீங்க... - பாரம்பரிய உடையில் அம்ரிதா அய்யர் - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 11, 2020 Rating: 5
Powered by Blogger.