சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ஸ்ரித்திகாவா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் போட்டோஸ்..!




கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் ஷக்தி மற்றும் சந்தியா நடித்து வெளியான, 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரிதிக்கா. 

இந்த படத்தை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான, 'கலசம்' சீரியலிலும் கால் பதித்தார். மேலும் இதுவரை 'வெண்ணிலா கபடி குழு' , 'வேங்கை' ஆகிய ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும். 

பல சீரியலில் நாயகியாக நடித்துள்ளார்.இதுவரை நாதஸ்வரம், குலதெய்வம் சீரியல்களில் என தொடந்து சீரியல்களில் இளம் கதாநாயகியாக நடித்து வந்த இவர், கல்யாணமாம் கல்யாணம் சீரியலில் அம்மா நடிகையாக மாறிவிட்டார்.

குலதெய்வம் சீரியல் முடிந்ததும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என நினைத்தேன் ஆனால் அம்மா கேரக்டர் வாய்ப்பு தேடி வந்தது. இது மிகவும் அழுத்தமான கதாப்பாத்திரம், கதையை கேட்டதுமே பிடித்து விட்டது. அதனால் விடவேண்டாம் என ஓகே சொல்லிவிட்டேன் என்றார். 

இது மட்டுமல்ல வெள்ளித்திரையில் கூட நடித்துள்ளார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தான் இவருக்கு நல்ல பேர் கிடைத்தது. அதன்பின் மதுரை டூ தேனி எனும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்த வந்தார். 


அதன்பின் ஸ்ரித்திகாவிற்க்கு வெள்ளித்திரையில் பெரிதும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சமீபத்தில் 2019ஆம் ஆண்டு ஸ்ரித்திகா, சனீஷ் எனும் நபரை திருமணம் செய்து கொண்டார். 


அவர்களின் திருமண புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் வெளிவந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் ஸ்லிமாக மாறியுள்ளார் ஸ்ரித்திகா என ரசிகர்கள், ஸ்ரித்திகா வெளியிட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்து கூறி வருகின்றனர்.