மதராசபட்டிணம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மாடலான இவர் தொடர்ந்து ரஜினி, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
பின்னர் காதல், கர்ப்பம், குழந்தை என பிஸியானதால் நடிப்பதற்கு இடைவெளி கொடுத்திருக்கிறார். விரைவில் மீண்டும் நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மதராசபட்டிணம் பட ஷூட்டிங்கின் போது நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளார் இயக்குநர் விஜய். அதில் எமி ஜாக்சனுக்கு இந்தியாவில் குறிப்பாக தமிழர்களின் வாழ்க்கை முறை வித்தியாசமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
சாலையில் மாடு செல்வதைப் பார்த்தே அவர் ஆச்சர்யப்பட்டதாகக் கூறியுள்ள விஜய், படப்பிடிப்பின் போது ஒரு நாள் தனது கார் கதவைத் திறந்து திடீரென இறங்கி அழுது கொண்டே ஓடினார் எமி ஜாக்சன். என்னாச்சுன்னு தெரியலையே என பயந்துவிட்டேன்.
உதவி இயக்குனர் ஓடிவந்து, எமி ஜாக்சனின் அம்மாவும் அழுது கொண்டிருப்பதாகச்
சொன்னார். எனக்கு இன்னும் அதிக பயம். என்ன விஷயம் என்று பார்க்கப் போனேன்.
எமி ஜாக்சன் அழுதபடி, இந்தக் குதிரை, வெயிலில் இருப்பதை என்னால் பார்க்க
முடியவில்லை.
அதைத் தத்தெடுக்க விரும்புகிறேன் என்று சொன்னார். நாங்கள்
படப்பிடிப்புக்காக ஒரு குதிரையை அழைத்து வந்திருந்தோம். படப்பிடிப்பின் போது குதிரை வெயிலில் இருந்ததைப் பார்த்து எமி அழுததாகவும் கூறியுள்ளார்.
பிறகு குதிரையை நிழல் இருக்கும் ஷெட் போன்ற ஒரு இடத்திற்கு கொண்டு சென்று, அதற்கு அதிக உணவு கொடுத்த பிறகு தான் எமி ஜாக்சன் அமைதியானாராம்.



