கொரோனாவுக்கே கிள்ளி கொடுத்தவர் - இப்போ அள்ளி அள்ளி கொடுக்கிறாரே - இது தான் காரணமாம்..!


சர்ச்சை என்றால் ஒரு நடிகர் சிக்குவார் அல்லது ஒரு நடிகை சிக்குவார். ஆனால், ஒரு குடும்பமே சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாகி போயிருக்கிறது. ஆளாளுக்கு ஒரு சர்ச்சையை கிளப்பிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

மதம் சார்ந்த விஷயங்களில் மூக்கை நுழைத்து பேசக்கூடாத பேச்செல்லாம் பேசி பெரும்பான்மை மக்களிடம் கடுமையான எதிர்ப்பை வாங்கி கட்டிக்கொண்டார் மனைவி. 

மேலும், அதே மதம், கோயில் சார்ந்த விவாகரத்தில் எல்லாம் தெரிந்த ஏகலைவன் போல மூக்கை நுழைத்து சிக்கினார் மாமனார். நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா என்று அரசை விமர்சிக்கிறேன் பேர்வழியில் வாய்க்கு வந்ததை பேசி வாங்கி கட்டிக்கொண்டிருக்கிறார் பிரகாச நடிகர். 

இப்படி மக்களிடம் ஒரு பக்கம் எதிர்ப்பு வலுத்துக்கொண்டிருக்க அவரது ரசிகர்கள் தாங்களால் முடிந்த வரை முட்டு கொடுத்து பார்த்தார்கள். வேலைக்கே ஆகவில்லை. 

எல்லா முன்னணி நடிகர்களும் லாக்டவுனில் அமைதியாக இருக்கும் போது இவர் மட்டும் எதோ பரம ஏழை போல தன்னுடைய படங்களை இணையத்தில் வெளியிட்டு சக தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடம் வம்பை சம்பாதித்து கொண்டார். 

லாக்டவுன் முடியட்டும் எப்படி தியேட்டர்ல படத்தில் ரிலீஸ் பண்றன்னு பாக்குறோம் என திரையரங்கு உரிமையாளர்கள் ஓப்பனாகவே பேசும் அளவுக்கு நடிகரின் இமேஜ் டேமேஜ். போதாக்குறைக்கு தன்னுடைய நடிப்பில் வெளியான புதிய படம் ஒன்றையும் ஆன்லைனில் வெளியிட போறேன் என்று அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் பிரகாச நடிகர். 

இதனால், இது நாள் வரை அவருக்கு முட்டு கொடுத்துக்கொண்டிருந்த ரசிகர்களே கடுப்பாகிப்போனார்கள். ஏற்கனவே கோபத்தில் இருந்த தயாரிப்பாளர்கள் இதனால் கொல காண்டில் இருகிறார்கள். 

ஒரு பக்கம் மக்கள் மத்தியில் ஒட்டு மொத்த குடும்பத்துக்கே கெட்ட பெயர்.. மறு பக்கம் திரையரங்க உரிமையாளர்கள் நெருக்கடி.. இப்போது ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்துவிட்டாகி விட்டது. 

குழம்பி போன நடிகர் சில பல கோடிகளை நன்கொடையாக அள்ளி கொடுக்க போகிறேன் என கூறி தனக்கு தானே முட்டு கொடுத்து வருகிறார். கொடுப்பவர் கொடுக்க வேண்டியது தானே, அதென்ன படத்தின் லாபத்தில் கொடுக்கிறேன் என்று சொல்வது.

படத்தை ஓட வைக்க விளம்பரமா இந்த நன்கொடை என ஒரு தரப்பு ரசிகர்கள் பங்கம் செய்து கொண்டிருகிறார்கள். மாஸ் நடிகரின் படத்திற்கு குறி வைத்து வீசப்பட்ட வலையில் வசமாக சிக்கிக்கொண்டார் பிரகாச நடிகர். 

ஆறு மாசம் இல்ல, ஒரு வருஷம் ஆனாலும் சரி என் படம் தியேட்டர்ல தான் ரிலீஸ் ஆகும். அதுவே என் ரசிகர்களின் விருப்பம் எனவும் பைனான்ஸ் வாங்கிய பணத்தை நானே செட்டில் பண்றேன் எனவும் பக்காவாக செட்டில் செய்து விட்டு அமைதியாக உட்கார்ந்து விட்டார் மாஸ் நடிகர். 

மாஸ் எப்போதுமா மாஸ் தான் என்பதை இந்த இக்கடட்டான சூழ்நிலையிலும் நிருப்பித்துவிட்டார் மாஸ் நடிகர். ஆனால், எல்லாம் தெரிந்த ஏகலைவன் அவர்களின் மகன் இப்படி ஆழம் தெரியாமல் காலை விட்டு இப்போது மூழ்கவும் முடியாமல், காலையும் எடுக்க முடியாமல் நட்ட நடு ஆற்றில் சிக்கிக்கொண்டிருக்கிறார் என்பதே நிதர்சனம்.

கொரோனாவுக்கே கிள்ளி கொடுத்தவர் - இப்போ அள்ளி அள்ளி கொடுக்கிறாரே - இது தான் காரணமாம்..! கொரோனாவுக்கே கிள்ளி கொடுத்தவர்  - இப்போ அள்ளி அள்ளி கொடுக்கிறாரே - இது தான் காரணமாம்..! Reviewed by Tamizhakam on August 31, 2020 Rating: 5
Powered by Blogger.