அந்த மனசு தான் சார் கடவுள் - "பெய்ரூட்" வெடி விபத்து - ஆபாச பட நடிகை மியா கலிஃபா என்ன செய்துள்ளார் பாருங்க..!


கடந்த 4-ம் தேதி (04/08/2020) அன்று நடந்த லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகம் முழுதுவதிலும் இருந்து பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

மாண்புமிகு. பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களும் நல்லெண்ண அடிப்படையில் இந்தியா லெபனான் அரசுக்கு இந்தியா உதவும் என்று அறிவித்துள்ளார். 

மட்டுமின்றி பல்வேறு திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அவர்களால் முடிந்த உதவியை செய்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த பேரிடரில் இருந்து லெபனான் மீள்வதற்கு உதவுவதற்காக முன் வந்துள்ளார் அந்த மாதிரி படங்களில் நடிக்கும் நடிகை மியா கலிஃபா.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் சுமார் 200 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 

ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டடத்தைச் சுற்றி 10 கி.மீ வரை இருந்த அனைத்து கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன. வெடிவிபத்துக்கு அரசின் அலட்சியமே காரணம் எனவும், துறைமுகத்தில் உள்ள கிடங்கில் இருந்த அமோனியம் நைட்ரேட் குறித்து அஜாக்கிரதையாக இருந்த அரசுக்கு கண்டன குரல்கள் எழுந்தன.

இதனை தொடர்ந்து, மக்கள் வீதியில் திரள, பிரதமர் தொடக்கி ஒட்டுமொத்த அரசு அமைச்சர்களும் ராஜிமானா செய்து விட்டனர். லெபனானை பூர்வீகமாக கொண்டவர் அந்த படங்களில் நடிக்கு நடிகை மியா காலிஃபா. 

இந்நிலையில், வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக தனது அடையாளங்களில் ஒன்றாக கண் கண்ணாடியை ஏலத்தில் விட்டுள்ளார். 

அந்த கண்ணாடி தன்னுடைய மிகவும் விருப்பமான கண்ணாடி எனவும், என் நாட்டிற்காக உதவவே நான் இதை ஏலம் விடுகிறேன் என்றும் கூறியுள்ளார். தற்போது வரை கண்ணாடியை வாங்குவதற்கான தொகை ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. “Anything for my country?” என்று இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார். 

இந்திய மதிப்பின் படி 74 லட்சம் ரூபாய் வரை அந்தகண்ணாடியை ஏலத்தில் எடுக்க அவரது ரசிகர்கள் முன்வந்துள்ளனர்.

அந்த மனசு தான் சார் கடவுள் - "பெய்ரூட்" வெடி விபத்து - ஆபாச பட நடிகை மியா கலிஃபா என்ன செய்துள்ளார் பாருங்க..! அந்த மனசு தான் சார் கடவுள் - "பெய்ரூட்" வெடி விபத்து - ஆபாச பட நடிகை மியா கலிஃபா என்ன செய்துள்ளார் பாருங்க..! Reviewed by Tamizhakam on August 12, 2020 Rating: 5
Powered by Blogger.