தொடையழகி நடிகை ரம்பா இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - வைரலாகும் புகைப்படங்கள்..!


தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரம்பா. ரஜினி, கார்த்திக், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். அப்போது தமிழ் சினிமாவில் இருந்த நடிகைகளுடன் ஒப்பிடுகையில், பக்கா ஸ்டைலிஷ் நடிகையாக திகழ்ந்தார் ரம்பா. 

மாடர்ன் உடைகளில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்த அவர், டிரடிஷனல் உடைகளையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக ’தொடை அழகி’ என்ற பட்டத்தையும் ரசிகர்கள் ரம்பாவுக்குக் கொடுத்தனர்.பின்னர் திருமணம் செய்துகொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். 

இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சில காலம் அவரிடமிருந்து விலகி இருந்தார். பிறகு பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொண்டு, மீண்டும் கணவருடன் இணைந்து வாழத் தொடங்கினார். 


அதன்பின் மூன்றாவதாக ஆண் குழந்தைக்கு தாயானார் ரம்பா.இந்நிலையில் தனது குடும்பப் படத்தை, இணையத்தில் வெளியிட்டுள்ளார். தோள் உயரத்திற்கு வளர்ந்த இரண்டு மகள்களும், கடைக்குட்டி மகனும் படு க்யூட்டாக இருக்கிறார்கள். மூன்று குழந்தைகளுக்கு பிறகும் ரம்பா அப்போது பார்த்தபடியே இன்னும் இளமையாக தெரிகிறார். 

குறிப்பாக அவருடைய ஹேர் கலர் அவரை ஸ்டைலிஷாக காட்டுகிறது. இந்த படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.1990களில் தென்னிந்திய ரசிகர்களை தன் அழகால் கட்டிப்போட்டவர் நடிகை ரம்பா. உழவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார் ஆந்திராவை சேர்ந்த விஜயலட்சுமி(ரம்பாவின் பெயர்). 


தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, அருணாசலம், சுந்தர புருஷன், காதலா காதலா உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, போஜ்புரி ஆகிய 6 மொழி படங்களில் நடித்து இருக்கும் ரம்பா, 'திரி ரோசஸ்' என்ற தமிழ் படத்தை தனது சகோதரர் வாசுவுடன் சேர்ந்து சொந்தமாக தயாரித்தார். 

இப்படம் தோல்வியடைய, தொடர்ந்து படங்களில் நடித்து கடனை அடைத்தார். இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு கனடாவில் வசிக்கும் இலங்கையை பூர்விகமாக கொண்ட இந்திரன் என்பவரை காதலித்து கரம்பிடித்தார். காதல் மலர்ந்தது எப்படி? கனடாவை சேர்ந்த மேஜிக் உட் நிறுவனத்தின் உரிமையாளர் இந்திரன் பத்மநாதன். 


இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக ரம்பா நியமிக்கப்பட்டார், அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. தனது விருப்பத்தை ரம்பாவிடம் முதலில் கூறி சம்மதம் பெற்று, அவர்களது குடும்பத்தினரின் சம்மதத்தையும் பெற்றார் இந்திரன்.

மிகவும் வித்தியாசமான முறையில் தனது காதலை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக விமானத்தை பறந்துசென்று நடுவானில் ரம்பாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

இந்திரனின் அன்பை கண்டு சொக்கிப்போனாராம் ரம்பா, இவர்களது காதலுக்கு இரு குடும்பத்தாரும் பச்சைக்கொடி காட்ட மிக ஜோராக 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் நடிகை ரம்பா நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு கனடாவில் செட்டில் ஆனார். 

இவர்களுக்கு லாண்யா, சாஷா என இரு பெண் குழந்தைகளும், ஷிவின் என்ற மகனும் உள்ளனர். திருமணமாகி சில ஆண்டுகளில் ரம்பா- இந்திரன் கருத்துவேறுபாடால் பிரிந்தாலும் குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒன்றிணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடையழகி நடிகை ரம்பா இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - வைரலாகும் புகைப்படங்கள்..! தொடையழகி நடிகை ரம்பா இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on August 20, 2020 Rating: 5
Powered by Blogger.