கொல்கத்தா பெண்ணான பிங்கி சர்க்கார் தெலுங்கு படங்களில் இருந்து தமிழ் படத்துக்கு வந்தார். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் மீனாட்சியாக மாறினார். க.கு படம் நன்றாக ஓடினாலும் அதற்கு பிறகு அவர் நடித்த எந்த படமும் வெற்றி பெறவில்லை.
மலையாளப் படத்திலும் நடித்து பார்த்தார் அங்கும் வெற்றி பெற முடியவில்லை. இதற்கிடையில் தந்தைக்கு உடல் நலமில்லாமல் போகவே அவர் பார்த்துக் கொண்டிருந்த பிசினஸ்களை பார்க்க சென்று விட்டார்.
ஒரு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தபோது ஒரு சுற்று பெருத்திருந்தார். அதனால் நினைத்தபடி வாய்ப்புகள் அமையவில்லை.
இப்போது உடலை குறைத்து கவர்ச்சியாக போட்டோ செஷன் நடத்தி அதை தெரிந்த இயக்குனர், தயாரிப்பாளர், மீடியாக்களுக்கு அனுப்பி வாய்ப்பு தேடி வருகிறார்.
விடா முயற்சியின் பயனாக வில்லங்கம், சூதாடி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார். தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் வெள்ளக்கார துரை படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார்.
எப்படியாவது ஹீரோயினாக விட்ட இடத்தை பிடித்து விடவேண்டும் என்று விடாது முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், இவரது சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.





