நீச்சல் உடையில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட நஸ்ரியா.! -குவியும் லைக்குகள்..!


20 டிசம்பர் 1994 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்த நஸ்ரியா நசீம், 2004 ஆம் ஆண்டு முதல் கலைத்துறையில் இருக்கிறார். நஸ்ரியா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் அவரது திறமையினால் சினிமா துறையில் வெற்றி பெற்றிருக்கிறார். 

கேரளா மற்றும் தமிழ்நாடு ஸ்டேட் விருதுகளையும் பெற்றிருக்கிறார். மேலும் பல்வேறு விருதுகளை தனது நடிப்புத் திறமைக்காக வாங்கியிருக்கிறார். மலையாளத் திரைப்படங்களில் பாடியிருக்கிறார். மேலும் மலையாளத்தில் வெளியான வரதன் என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளரும் கூட. 

இவர் மலையாள இயக்குனர் பாசில் அவர்களின் மருமகள். மலையாளத்தின் தற்போதைய நம்பிக்கை நாயகனான பகத் பாசில் அவர்களின் மனைவி. தமிழில் “நேரம்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் ராஜா ராணி மற்றும் நையாண்டி ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 

ராஜா ராணி தமிழில் இவருக்கு ஒரு பேர் சொல்லும் திரைப்படம். மலையாளத்தில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்திருந்த இவர் சினிமா துறையில் வெற்றி நாயகியாக இருந்தபோதே திருமணம் செய்து படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். 

தற்போது அவர் கணவர் பகத் பாசிலுடன் சேர்ந்து டிரான்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் ஜூலை ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செப்டம்பர் 2019 எடுத்து முடிக்கப்பட்டது. 

இந்த திரைப்படம் கேரளாவில் 20 பெப்ரவரி 2020 அன்று வெளியானது. திருமணத்திற்குப் பின் நீண்ட இடைவெளி விட்டு வெளியாகும் திரைப்படம் என்பதால் நஸ்ரியாவின் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை வெகுவாக எதிர்பார்த்திருந்தார்கள். 

அந்த எதிர்பார்ப்பை சரியாக பூர்த்தி செய்து இருக்கிறார் என்றே கூற வேண்டும். இது ஒரு சைக்கலாஜிக்கல் சம்பந்தமான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இது திரைப்படத்தை அன்வர் ரஷீத் அவர்கள் தயாரித்திருக்கிறார்.


மதமாற்றம்செய்யும் கூட்டத்தின் உண்மை முகம் என்ன என்பதை தோழுரித்து காட்டிய இந்த "TRANCE" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. 


இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் கணவருடன் நெருக்மாக இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நஸ்ரியா.

நீச்சல் உடையில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட நஸ்ரியா.! -குவியும் லைக்குகள்..! நீச்சல் உடையில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட நஸ்ரியா.! -குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on August 24, 2020 Rating: 5
Powered by Blogger.