மரக்கன்றுகள் நட்ட விஜய் - மீரா மிதுன் கூறியதை பாருங்க - உச்ச கட்ட கோபத்தில் விஜய் ரசிகர்கள்..!


தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு கடந்த ஆக., 9ம் தேதி அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு இந்தியத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

கொரோனாவால் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்க ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார் மகேஷ்பாபு. அதேசமயம் பிறந்தநாள் அன்று 'கிரீன் இந்தியா சேலஞ்ச்' படி வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டு புகைப்படத்தை வெளியிட்டார். 

மேலும் அந்த சவாலை தமிழ் நடிகர் விஜய், தெலுங்கு நடிகர் ஜுனியர் என்டிஆர், நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோர் தொடரும்படி கேட்டுக் கொண்டார். 

இந்நிலையில் இருதினங்களுக்கு பின் மகேஷ்பாபுவின் சவாலை விஜய் ஏற்று, தனது இல்லத்தில் மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார். மேலும், ''இது உங்களுக்காக மகேஷ் பாபு. நல்ல ஆரோக்கியம் மற்றும் கிரீன் இந்தியாவுக்காக நன்றி. பாதுகாப்பாக இருங்கள்'' என டுவிட்டரில் தெரிவித்துள்ளார் விஜய். 

இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக விஜய் மற்றும் சூர்யாவை தொடர்ந்து சீண்டி வரும் மீரா மிதுன் தற்போது விஜயின் இந்த செயலையும் கிண்டல் செய்து ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.

உங்கள்வில்லாவுக்குள் செடி நடுவது பொது சேவையகாது. செடி நடுதல் என்றால் என்ன என்று விவேக் சாரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று கிண்டலடித்துள்ளார். 

இது விஜய் ரசிகர்கள் மேலும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

மரக்கன்றுகள் நட்ட விஜய் - மீரா மிதுன் கூறியதை பாருங்க - உச்ச கட்ட கோபத்தில் விஜய் ரசிகர்கள்..! மரக்கன்றுகள் நட்ட விஜய் - மீரா மிதுன் கூறியதை பாருங்க - உச்ச கட்ட கோபத்தில் விஜய் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 11, 2020 Rating: 5
Powered by Blogger.