முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ஸ்ரீதிவ்யா - வாயை பிளந்த ரசிகர்கள்..!


வருதப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை ஸ்ரீ திவ்யா அடுத்தடுத்த படங்களில்தமிழ் ரசிகர்களின் மனதில்ஷேர் போட்டு அமர்ந்தார்.தொடர்ந்து அவருடன் காக்கிச்சட்டை, ரெமோ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும், ஜி.வி. பிரகாஷ், கார்த்தி, விஷால், அதர்வா, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த ஸ்ரீ திவ்யா, சிறு வயது முதலே தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். 2010ம் ஆண்டு டோலிவுட்டில் ரிலீசான மானசரா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா, தொடர்ந்து சில தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். 

தமிழில் 2013ம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, சத்யராஜ் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் லதா பாண்டி ரோலில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், பள்ளி மாணவியாக லதா பாண்டி எனும் கதாபாத்திரத்தில் அழகா நடித்து அசத்தியிருப்பார் ஸ்ரீ திவ்யா. 

அதிலும், அந்த படத்தில் இடம்பெற்ற ஊதா கலரு ரிப்பன் பட்டி தொட்டியெங்கும் அந்த நேரத்தில் எல்லா விழாக்களிலும் போடப்பட்டு மிகப்பெரிய வைரலானது.சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை படங்களில் நாயகியாக நடித்த ஸ்ரீ திவ்யா, ரெமோ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். 

நடிகை ஸ்ரீ திவ்யாவின் சரியான ஆன் ஸ்க்ரீன் ஜோடி என்றால் அது சிவகார்த்திகேயன் தான். இப்போ சிவகார்த்திகேயன் நயன்தாரா, சமந்தா என சென்று விட்ட நிலையில், ஸ்ரீ திவ்யாவுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

ஏனென்றால் கவர்ச்சிகரமான கதைகளில் நடிக்க விரும்பாததால் தான் பல பட வாய்ப்புகளை மிஸ் பண்ணிவிட்டாராம். இப்படி நான் கவர்ச்சி நாயகியாக நடிக்க மாட்டேன் என்று கூறிவந்த ஸ்ரீதிவ்யாவுக்கு திடீரென என்ன ஆனது என்று தெரியவில்லை. 

அவர் தற்போது நடித்து வரும் புதிய படங்களில் கூடுதல் கவர்ச்சியாக நடித்து வருகிறாராம். இது பற்றி ஸ்ரீதிவ்யா கூறுகையில், முதல் படத்தில் கிராமத்து வேடத்தில் என்னை பார்த்து ரசித்து ஆதரவு தெரிவித்த ரசிகர்கள், இனி என்னை கவர்ச்சி வேடத்திலும் பார்ப்பார்கள்.

பிகினிக்காக உடல் எடை குறைப்பு..?


இந்த காலத்தில் இயக்குனர்களின் நாயகியாக இருந்தால் தான், சினிமாவில் வளர முடியும் என்பதை உணர்ந்ததால் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். 

இதனை தொடர்ந்து, சோதனை ஓட்டமாக தெலுங்கில் இளம் நடிகர் ஒருவர் படத்தில் கமிட்டாகியுள்ள ஸ்ரீதிவ்யா முதன் முறையாக பிகினி உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறுகிறார்கள். இதற்காக, கணிசமாக உடல் எடை குறைத்துள்ளாராம் ஸ்ரீ திவ்யா.


லாக்டவுன் முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகின்றது. சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வருவார் ஸ்ரீதிவ்யா என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ஸ்ரீதிவ்யா - வாயை பிளந்த ரசிகர்கள்..! முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ஸ்ரீதிவ்யா - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 22, 2020 Rating: 5
Powered by Blogger.