கசந்த காதல் வாழ்க்கை - கையில் குழந்தை - மன்மதன் பட நடிகை சிந்து துலானியின் மறுபக்கம்..!

சினிமாவில் ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்து பின்பு மிகப்பெரிய அளவில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகள் பெரும்பாலும் தற்போது சினிமாவில் காணாமல் போய் வருகின்றனர். 
 
அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த சுள்ளான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சிந்து துலானி.இப்படம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று பிரபலமடைந்தார்.சிந்து துலானி மும்பையில் பிறந்தவர். 
 
பேர் அன்ட் லவ்லி விளம்பரத்தில் நடித்து புகழ்பெற்றார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். என்னதான் சுள்ளான் படத்தில் தனுஷுடன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகம் ஆனாலும், இந்த படத்தை அடுத்து சிம்புவின் மன்மதன் படத்தில் வில்லி கேரக்டர், மூலம் தமிழ் திரை உலகில் அறியப்பட்ட நடிகையானார். 
 
மன்மதன் படத்தில் சிந்துவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது, வில்லி கேரக்டரில் பக்காவாக பொருந்தி இருப்பார். பின்னர் இவர் தன்னுடன் சேர்ந்து நடித்த சுரேந்தர் ரெட்டி என்பவருடன் பல நாட்கள் லிவிங்-டு-கெதர் வாழ்க்கையில் இருந்துள்ளார். 
 
இவர்களுக்கு தற்போது ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால் இவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட மனகசப்புகள் காரணமாக இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே பிரிந்து உள்ளனர்.
 
இது குறித்து சமீபத்தில் சிந்துவிடம் பேட்டி ஒன்றில் கேட்டதற்கு, இது என்னுடைய தனிப்பட்ட விஷயம், உங்களுக்கு பதில் கூற தேவையில்லை என மறுத்து பேசியுள்ளார்

கசந்த காதல் வாழ்க்கை - கையில் குழந்தை - மன்மதன் பட நடிகை சிந்து துலானியின் மறுபக்கம்..! கசந்த காதல் வாழ்க்கை - கையில் குழந்தை - மன்மதன் பட நடிகை சிந்து துலானியின் மறுபக்கம்..! Reviewed by Tamizhakam on August 07, 2020 Rating: 5
Powered by Blogger.