அந்த ஹீரோயின் பெயரில் இம்புட்டு சொத்தா..? - அதிகமா நடிக்கல.. சம்பளமும் கம்மி.. - மிரண்டு போன அதிகாரிகள்..!


சினிமா துறை என்பது எப்போதும் சர்ச்சைகளின் கூடாரமாகவே திகழ்கிறது. அந்த வகையில், சினிமா துறையை வட்டமடிக்கும் புதிய பிரச்சனை போதை பொருள் புழக்கம். இதில், முக்கியமான முன்னணி நடிகைகள் பெயர் அடிப்பட்டதை தொடர்ந்து விவகாரம் சூடு பிடித்தது.

இதில்,இன்னும் பல முன்னணி நடிகர்கள், அரசியல் புள்ளிகள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்வதால் விசாரணையும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணியில் இருக்கும் அந்த சிங் நடிகை சிக்கிய பின் சினிமா வட்டாரங்கள் அதிர்ந்தன.

இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு தண்ணி தரமாட்டோம் என்று கூறிய மாஜி நடிகை ஒருவரின் சொத்து விபரங்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளை மிரண்டு போக செய்துள்ளது. தமிழில், ஜெயமான நடிகர் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இந்த நடிகை.

தமிழ்நாடு, கர்நாடாக இடையே தண்ணீர் குறித்து தகராறு ஏற்பட்டு தமிழக வாகன்கங்கள் அடித்து நொறுக்கப்பட்டு கலவரமாகிக்கொண்டிருந்த நேரம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது. இது எங்கள் தண்ணீர் என்று வீடியோ வெளியிட்டு பெரும்பான்மையான தமிழ் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தவர் இந்த நடிகை.

அந்த வீடியோ வெளியிட்ட போது வாடகை வீட்டில் இருந்த அந்த நடிகைக்கு தற்போது அந்த ஸ்டேட்டில் 15க்கும் மேற்பட்ட ப்ளாட்டுகள், வீட்டுமனைகள் உள்ளது எந்த தகவல் அதிகாரிகாரிகளை மிரண்டு போக செய்துள்ளது.

அதிக படங்களில் நடிக்க வில்லை, இவருக்கு சம்பளமும் குறைவு தான். பிறகு எப்படி இவருக்கு கோடிக்கணக்கில் சொத்து என்ற விசாரணை ஒரு பக்கம் முடுக்கி விட்டுள்ளது அமலாக்க துறை. 

இந்த சொத்துக்களை போதை பொருள் விற்று தான் இவர் வாங்கியிருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை அதிகாரிகள் தொடங்கியுள்ளதால் கடும் பீதியில் உறைந்து போயுள்ளாராம் அம்மணி.

** எப்படி தமிழ் நாட்டுக்கு தண்ணி தரமுடியாதா...? கிரீஸ் டப்பாவ எப்படி ஓதச்சீங்க..


அந்த ஹீரோயின் பெயரில் இம்புட்டு சொத்தா..? - அதிகமா நடிக்கல.. சம்பளமும் கம்மி.. - மிரண்டு போன அதிகாரிகள்..! அந்த ஹீரோயின் பெயரில் இம்புட்டு சொத்தா..? - அதிகமா நடிக்கல.. சம்பளமும் கம்மி.. - மிரண்டு போன அதிகாரிகள்..! Reviewed by Tamizhakam on September 19, 2020 Rating: 5
Powered by Blogger.