நடிகை ஸ்ரீ ரெட்டி குறித்து பெரிய அறிமுகம் எதுவும் தேவையில்லை. கடந்த இரண்டு வருடங்களாக தெலுங்கு, தமிழ் திரையுலகில் உள்ள பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.
கடந்த சில மாதங்களாக பாலிவுட்டை கங்கனாவும், கோலிவுட்டை மீரா மிதுனும் பல குற்றச்சாட்டுக்களால் கலங்கடித்து வந்ததால் தனக்கு வேலை எதுவும் இல்லாமல் ஒதுங்கி இருந்தார் ஸ்ரீரெட்டி.
இந்தநிலையில் சில நாட்களாக கன்னட, தெலுங்கு திரையுலகில் போதைப்பொருட்களை பயன்படுத்தும் பிரபலங்கள் போலீஸ் வளையத்தில் சிக்கி வருகிறார்கள்.
இந்தநிலையில் வான்டட் ஆக என்ட்ரி கொடுத்துள்ள ஸ்ரீரெட்டி, “தெலுங்கு திரையுலகில் பிரபலங்கள் பலரும் போதை பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற பார்ட்டிகள் அங்கே அதிகம் நடக்கும். அப்போது அங்கே போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்கும் என கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல, பார்ட்டிக்கு வரும் பெண்களுக்கு போதை வஸ்து கொடுத்து தவறாக பயன்படுத்துவது கூட நடக்கிறது. எனக்கு உரிய பாதுகாப்பு கொடுத்தால், போதைப்பொருள் பயன்படுத்தும் பிரபலங்கள் யார் யார் என்பதை நான் வெளியிட தயார்” என்று இன்னொரு பரபரப்புக்கு திரி கொளுத்தியுள்ளார் ஸ்ரீரெட்டி.
விரைவில் இது குறித்த விஷயங்கள் வெளியாகி பூகம்பத்தை ஏற்படுத்தும் என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.


