"ஒரு படம் நடிக்கணும்-ன்னு கூட்டிட்டு போவாங்க.. ஆனால்....." - ஷகிலா ஒப்பன் டாக்..!


நடிகை ஷகிலா பிரபலமான கவர்ச்சி நடிகை ஆவார். இவர் 50 -கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். இவர் 1954 ஆம் ஆண்டு வெளியான ஆர் பார் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 
 
இந்நிலையில் இவரது வாழ்கை வரலாற்று படம் ஒன்று இந்திரஜித் லங்கேஷ் என்பவரால் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இயற்றப்பட்டுள்ளது. 
 
இந்த படத்தில் ஷகிலா கதாபாத்திரத்தில் நடிகை ரிச்சா சதா (Richa Chadha) நடிக்கிறார். இந்த படம் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் 3 மொழிகளில் வெளியாக உள்ளது. சமீப காலமாக, சர்ச்சைகுரிய நடிகைகளின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதில் இயக்குனர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
 
அந்த வகையில் 16 வயதில் திரையுலகில் கால் பதித்து அந்த பட நடிகையாக படுக்கையறை காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஷகிலா. மலையாளத் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோரது படங்களையே தன் படங்களால் ஆட்டம் காண வைத்தவர் கவர்ச்சி நடிகை ஷகிலா. 
 
அவர் நடித்து வெளிவரும் மலையாளப் படங்களுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் ஷகிலாவுக்கு எதிராகத் திரண்டு அவரை மலையாளத்தில் நடிக்க முடியாமல் செய்த வரலாறும் உண்டு. 
 
அவரது பல அந்த மாதிரியான படங்கள் தமிழ்நாடு தவிர தென்னிந்தியாவிலும் வெளியாகி வசூலை அள்ளியதுண்டு. மலையாளத்தில் நடிக்க முடியாமல் போன பிறகு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நகைச்சுவை நடிகையாக சில படங்களில் நடித்தார். 
 
இப்போது அவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளார்கள். ஹிந்தியில் உருவாக உள்ள இந்தப் படத்தை இந்திரஜித் லங்கேஷ் இயக்க உள்ளார். ஷகிலா கதாபாத்திரத்தில் ரிச்சா சதா நடிக்கப் போகிறார். ஷகிலா கதாபாத்திரத்தில் நடிக்க 'காலா' நாயகி ஹுமா குரேஷி, ஸ்வரா பாஸ்கர், ரிச்சா சந்தா ஆகியோரிடையே கடும் போட்டி இருந்தது. 
 
கடைசியில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ரிச்சா தேர்வாகியுள்ளார். வரும் டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. ஹிந்தியில் உருவாக உள்ள இந்தப் படத்தின் சில காட்சிகள் மலையாளத்திலும் படமாக உள்ளதாம். அப்படியே கண்டிப்பாக தமிழ், தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடவுள்ளார்கள்.
 
சமீபத்தில், ஒரு பேட்டியில் பேசிய ஷகிலா நான் கவர்ச்சியாக நடித்த போதும் இயக்குனர் மற்றும் தயாரிப்பளர்களால் ஏமாற்றப்பட்டேன். ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று அழைத்து செல்வார்கள். ஆனால், மூன்று அல்லது நான்கு படங்களுக்கு தேவையான காட்சிகளை ஒரே படம் தான் என்று கூறி படமாக்கி கொள்வார்கள்.

மூன்று, நான்கு படங்கள் வசூல் செய்வார்கள். ஆனால், எனக்கு ஒரே ஒரு படத்திற்க்கான சம்பளம் தான் கிடைக்கும். நான் ஒப்புக்கொள்ளாத பல படங்களில் என்னுடைய காட்சிகள் இருக்கும். போஸ்டரில் என்னுடைய புகைப்படத்தை போடுவார்கள். ஆனால், அந்த காட்சிகள் வேறு ஒரு படத்திற்காக நான் நடித்ததாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

"ஒரு படம் நடிக்கணும்-ன்னு கூட்டிட்டு போவாங்க.. ஆனால்....." - ஷகிலா ஒப்பன் டாக்..! "ஒரு படம் நடிக்கணும்-ன்னு கூட்டிட்டு போவாங்க.. ஆனால்....." - ஷகிலா ஒப்பன் டாக்..! Reviewed by Tamizhakam on October 11, 2020 Rating: 5
Powered by Blogger.