இம்புட்டு கவர்ச்சி உடம்புக்கு ஆகாது மேடம்.. - ஈஷா ரெப்பா-வை விளாசும் ரசிகர்கள்.!
தெலுங்கில் பல படங்களில் நாயகியாக நடித்தவர் ஈஷா ரெப்பா. தமிழில் ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தில் நடித்துள்ளார்.
எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் டிசம்பர் மாதம் 20-ம் தேதி வெளியாகவுள்ளது. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைபடங்களில் படு கவர்ச்சியாக இருப்பார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரையும் இவரை கண்டபடி விமர்சனம் செய்து வந்தார்கள்.இதுகுறித்து பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஈஷா, "நான் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை.
தெலுங்குப் பெண்கள் இப்படியான கதாபாத்திரங்கள் மட்டும்தான் செய்வார்கள் என்று துறையில் முடிவெடுத்து விடுகிறார்கள். அதை உடைப்பதற்காக என்னால் எந்தக் கதாபாத்திரமும் செய்ய முடியும் என்று அனைவருக்கும் உணர்த்துவேன்.
மேலும், இவ்வாறாக கவர்ச்சிகரமான புகைப்படங்கள் வெளியிட்டால் அதில் என்ன தவறு.? நான் கவர்ச்சியான பெண் தான். அந்தப் புகைப்படங்களைப் பதிவிட்டதில் எந்தத் தவறும் இல்லை. வரம்பு மீறாத வரையில் கவர்ச்சிகரமான உடைகள் அணிவதில் எனக்குப் பிரச்சினை இருப்பதில்லை.
பார்ப்பவர்கள் கண்ணில்தான் எல்லாம் எல்லாம் உள்ளது” என்று காட்டமாகப் பதில் அளித்திருக்கிறார்.
இம்புட்டு கவர்ச்சி உடம்புக்கு ஆகாது மேடம்.. - ஈஷா ரெப்பா-வை விளாசும் ரசிகர்கள்.!
Reviewed by Tamizhakam
on
October 16, 2020
Rating:
