உடல் எடை குறைத்து விகாரமாக மாறிய எமி ஜாக்சன் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!


பிரபல நடிகையாக இருக்கும் எமி ஜாக்சன், கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். 
 
அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தை பெற்றுக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். 
 
இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வார். குழந்தை பெற்ற பிறகு லேசாக கூடிய உடல் எடையை முற்றிலும் குறைத்து பழைய தோற்றத்திற்கு மாறி இருக்கிறார். 
 
எமி ஜாக்சன் இந்நிலையில், ஸ்லிம் லுக்கில் உடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில் இருக்கும் புகைப்படத்தை எமி ஜாக்சன் வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். 
 
அந்த உடையில் பார்த்தால் எமி ஜாக்சன் பேண்ட் போட்டிருக்கிறாரா? என பலருக்கும் சந்தேகம் எழுந்திருக்கிறது. அந்த அளவிற்கு உடலை இறுக்கி பிடித்திருக்கும் ஸ்கின் கலர் உடையை அணிந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
 
 
மேலும், சில ரசிகர்கள் இவர்சாப்பிடுகிறாரா இல்லையா..? இப்படி உடல் இளைத்து விகாரமாக மாறிவிட்டார் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
உடல் எடை குறைத்து விகாரமாக மாறிய எமி ஜாக்சன் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..! உடல் எடை குறைத்து விகாரமாக மாறிய எமி ஜாக்சன் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on October 15, 2020 Rating: 5
Powered by Blogger.