"முருகதாஸ் அங்கிள்-ற்கு பெண்களின் பி**ப்**-ஐ திருட பிடிக்கும்" - ஸ்ரீரெட்டி மிகமோசமான பதிவு..!


பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாதவர் ஸ்ரீரெட்டி. இவரது நடிப்பில் இதுவரை ஒரு படம் கூட வெளியாகவில்லை. ஆனாலும் இந்தியா முழுக்க இவர் பிரபலம். 
 
படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியதை நம்பி பலருடன் படுக்கையை பகிர்ந்ததாக கூறி பரபரப்பை கிளப்பினார். தெலுங்கு, தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் தன்னை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தினார். 
 
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கள் இயக்குநர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இயக்குநர்கள் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். பல்வேறு திரையுலக பிரபலங்கள் மீது புகார் கூறி, அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தும் நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது மீண்டும் இயக்குனர் முருகதாஸை வம்பிற்கு இழுத்துள்ளார். 
 
ஏற்கனவே, முருகதாஸ் குறித்து கடந்த 2018-ம் வருடம் "ஹாய் தமிழ் டைரக்டர் முருகதாஸ்..எப்படி இருக்குறீர்கள்? கிறீன் பார்க் ஹோட்டல் ஞாபகம் இருக்கிறதா? வெளிகொண்டா ஸ்ரீநிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். நீங்கள் எனக்கு பட வாய்ப்பு தருவதாக வாக்கு கொடுத்தீர்கள்.ஆனால், இதுவரை நீங்கள் அதை செய்யவில்லை. 
 
நீங்களும் சிறந்த மனிதர் தான் சார்” என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது சர்கார் படத்தை இயக்கிக்கொண்டிருந்தார் முருகதாஸ். ஊருக்குள்ள எத்தனையோ இயக்குனர்கள் இருக்கும் போது இவரை எதுக்கு இந்த ஸ்ரீ ரெட்டி டார்கெட் செய்கிறார். 
 
ஒருவேளை இவர் சொல்வது உண்மையாக இருக்குமோ என்று பலரும் பேசினார்கள். இந்த விவகாரம் மெல்ல மெல்ல ஓய்ந்தது. இந்நிலையில், மீண்டும் முருகதாஸை இழுத்து தெருவில் விட்டுள்ளார் அம்மணி. 
 
அவர் கூறியுள்ளதாவது, " முருகதாஸ் அங்கிளிற்கு பெண்களின் பிறப்புறுப்பு மற்றும் மற்றவர்களின் படங்களின் கதையை திருடுவதற்கு பிடிக்கும். ஆனால், இவரு, சினிமாவில் லெஜன்ட். ஹா..ஹா.. சாரி தமிழ் சினிமா.." என்று கூறியுள்ளார். இந்த பதிவு ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது. 
 
 
ஒருவர் குற்றம் செய்திருந்தால் அவர் மீது புகார் கொடுப்பதை விட்டு விட்டு சதா சர்வ காலமும் இப்படி அவர்களது பெயரை டேமேஜ் செய்வது நியாயமனது அல்ல என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

"முருகதாஸ் அங்கிள்-ற்கு பெண்களின் பி**ப்**-ஐ திருட பிடிக்கும்" - ஸ்ரீரெட்டி மிகமோசமான பதிவு..! "முருகதாஸ் அங்கிள்-ற்கு பெண்களின் பி**ப்**-ஐ திருட பிடிக்கும்" - ஸ்ரீரெட்டி மிகமோசமான பதிவு..! Reviewed by Tamizhakam on October 05, 2020 Rating: 5
Powered by Blogger.