"இதனால் தான் விஜயுடன் சேர்ந்து நடிக்கவே கூடாது என முடிவு செய்தேன்.." - போட்டு உடைத்த நடிகை சங்கவி..!

 
நடிகை சங்கவி தல அஜித் நடித்து 1993 ஆம் ஆண்டு வெளியான 'அமராவதி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதைத்தொடந்து நடிகர் விஜயுடன் 'ரசிகன்' படத்தில் கதாநாயகியாக நடித்தார். 
 
தமிழ் மொழி மட்டும் இன்றி தெலுங்கு, கன்னட, உள்ளிட்ட மொழிப் படங்களில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள சங்கவி இளைய தளபதி விஜயுடன் மட்டும் 'விஷ்ணு', 'கோயம்புத்தூர் மாப்பிள்ளை', 'நிலவே வா' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நடிகை சங்கவி நடித்த படங்கள் வெற்றிபெற காரணம் இவர் கவர்ச்சியாக நடிப்பது என பல விமர்சனங்களும் எழுந்துள்ளது. ஆனால் இவர் கவர்ச்சியாக நடித்தாலும், கதைக்கும் கதாப்பாத்திரதிற்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்தார். 
 
சங்கவி 35 வயதை கடந்த பின் கடந்த 2016 ஆம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு முன் ஒரு சில படங்களில் குணசித்திர வேடங்களிலும், டிவி நிகழ்ச்சிகளையும் நடந்தி வந்த இவர் திருமணத்திற்கு பின் முழுமையாக திரையுலகை விட்டு விலகினார். 
 
ஆரம்ப காலத்தில் தொடர்ந்து விஜய் திரைப்படங்களில் அவருக்கு இணையாக நிறைய படங்களில் நடித்தார். இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாக அப்போதைய செய்திகள் தெரிவித்தன. அப்போதைய பத்த்ரிக்கை செய்திகளில் இவர்களை பற்றி கிசுகிசு வராத நாளே இல்லை எனலாம். 
 
 
இன்னும் ஒரு படி மேலே சென்று, சிலர் இருவரும் காதலிப்பதாகவும் கூறினர். ஆனால், இதுகுறித்து சங்கவி நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை என்று தெரிவித்தார். 
 
 
இதுபோன்ற செய்திகள் தொடர்ச்சியாக வருவதால் நான் விஜய் படங்களில் நடிப்பதை என்னுடைய நண்பர்களும், சில தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை. மேலும், விஜய்யின் பெயரும் சேர்ந்தே இந்த விஷயத்தில் அடிபட்டுக்கொண்டே இருந்தது. இதனால், இருவரின் நலன் கருதியும் இனி விஜயுடன் சேர்ந்து நடிக்க கூடாது என முடிவு செய்ததாக சங்கவி கூறியுள்ளார்.

"இதனால் தான் விஜயுடன் சேர்ந்து நடிக்கவே கூடாது என முடிவு செய்தேன்.." - போட்டு உடைத்த நடிகை சங்கவி..! "இதனால் தான் விஜயுடன் சேர்ந்து நடிக்கவே கூடாது என முடிவு செய்தேன்.." - போட்டு உடைத்த நடிகை சங்கவி..! Reviewed by Tamizhakam on October 13, 2020 Rating: 5
Powered by Blogger.