ஸ்ரீரெட்டி என்றாலே சர்ச்சை தான். ஆரம்பத்தில் தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கையில் பயன்படுத்தி கொண்டே ஏமாற்றி விட்டனர் என முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் சிலரின் பெயரை டேமேஜ் ஆக்கினார்.
சமீபத்தில், போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள் அனைவரின் பெயரையும் சொல்ல தயாராக இருக்கிறேன் என நடிகை ஸ்ரீரெட்டி அதிரடியாக கூறியிருக்கிறார்.
திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் கடந்த சில வாரங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் நடிகை ரியா மற்றும் கன்னடத் திரையுலகைச் சேர்ந்த ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி போன்ற நடிகைகள் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஒருசில நடிகர் நடிகைகள் இந்த விவகாரத்தில் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஏற்கனவே திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு தகுந்த பாதுகாப்பு அளித்தால் போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்களின் பெயர்களை தெரிவிக்க தயார் என்று தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.
தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோக்களின் வீடுகளில் நடக்கும் பார்ட்டிகள் அனைத்திலும் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாகவும், போதைப் பொருள் இல்லாத பார்ட்டிகளே இல்லை என்றும் ஸ்ரீரெட்டி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
ஸ்ரீ ரெட்டி மேலும் தெலுங்கு பிரபலங்களின் வாரிசு நடிகர்கள் நடத்தும் நடன பார்ட்டிகளிலும் போதைப் பொருள் உள்ளது என்றும் அது மட்டுமின்றி பல ஒழுக்கக் கேடான விஷயங்களும் நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா அரசு எனக்கு தகுந்த பாதுகாப்பு அளித்தால் போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள் மற்றும் நடிகைகளின் பெயரை தெரிவித்த தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய பெருத்த அழகுகளை காட்டி இளசுகளை கிக் ஏற்றி வருகிறார்.
அந்த வகையில், தற்போது என்னோட கூலரை புடிங்க..? என்று இரட்டை அர்த்தத்தில் ஒரு கேப்ஷன் வைத்து கடற்கரையில் நிற்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.



