22 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல தமிழ் நடிகருக்கு மீண்டும் ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்.. ! - எகிறிய எதிர்பார்ப்பு..!


ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் படம், இந்தியாவில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எனினும் சீனாவில் இந்தப் படத்தின் வசூல் நம்பமுடியாத வகையில் இருந்தது. 
 
அங்கு அதன் வசூல் ரூ. 300 கோடியைத் தாண்டியது. இதன்மூலம் சீனாவில் அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களில் 3-ம் இடத்தைப் பிடித்தது. டங்கல் (1,200 கோடி), சீக்ரெட் சூப்பர் ஸ்டார் (ரூ. 700 கோடி) படங்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது அந்தாதுன். 
 
அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இந்தப் படம் சிறந்த நடிகர் - (ஆயுஷ்மன் குரானா), சிறந்த திரைக்கதை (தழுவல்), சிறந்த ஹிந்திப் படம் என மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ், சித்தார்த் போன்ற நடிகர்கள் முயன்ற நிலையில், நடிகர் பிரசாந்த்துக்கு அந்த வாய்ப்பு சென்றுள்ளது. 
 
பிரசாந்தின் தந்தை நடிகர் தியாகராஜன், அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். ‘நடிகர் பிரசாந்த் டிரினிடி காலேஜ் ஆஃப் லண்டனில் பியானோவின் நான்காவது கிரேடு தேர்வை வென்றுள்ளார். வீட்டிலும் அவர் பியானோவைத் தினமும் வாசிப்பார். 
 
எனவே பியானோ கலைஞர் வேடத்துக்கு பிரசாந்த் பொருத்தமாக இருப்பார்’ என தியாகராஜன் ஒரு பேட்டியில் கூறினார். இப்படத்துக்காக பியானோ பயிற்சியில் ஈடுபட்டு வரும் பிரசாந்த் தனது எடையை 20 கிலோவுக்கு அதிகமாக குறைத்துள்ளதாகத் தெரிகிறது. 
 
அந்தாதுன் தமிழ் ரீமேக்கை பிரபல இயக்குநர் மோகன் ராஜா இயக்கவிருந்த நிலையில் இப்படம் பற்றிய புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. தவிர்க்க முடியாதக் காரணங்களால் அந்தாதுன் ரிமேக்கை மோகன் ராஜா இயக்கப்போவதில்லை எனத் தெரிகிறது. 
 
அவருக்குப் பதிலாக பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிக் இயக்கவுள்ளார். மேலும் தபு வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயை படக்குழு அணுகியுள்ளது. 
 
அவர் சம்மதம் தந்துவிட்டால் ஜீன்ஸ் படத்துக்குப் பிறகு பிரசாந்தும் ஐஸ்வர்யா ராயும் மீண்டும் நடிக்கும் படமாக இது இருக்கும். இதனால் அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
22 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல தமிழ் நடிகருக்கு மீண்டும் ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்.. ! - எகிறிய எதிர்பார்ப்பு..! 22 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல தமிழ் நடிகருக்கு மீண்டும் ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்.. ! - எகிறிய எதிர்பார்ப்பு..! Reviewed by Tamizhakam on November 05, 2020 Rating: 5
Powered by Blogger.