80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து எல்லா நடிகைகளுக்கும் எல்லாம் வயிற்றில் புளியை கரைத்து அழவிட்டது நடிகை நதியா. இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வலது காலை எடுத்து வைத்தார்.
அதனை தொடர்ந்து 90 களில் பல படங்களில் ஹுரோயினாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து செட்டிலாகினார்.
அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நதியா மீண்டும் தமிழில் M குமரன் படம் மூலம் ரி என்ட்ரி கொடுத்து இப்போ வரை ஒரு சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதி நடித்த "சூப்பர் டீலக்ஸ்" படத்தில் ரம்யாகிருஷ்ணன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நதியா தான். ஆனால், கதாபாத்திரத்தை பற்றி முழுமையாக தெரிந்தவுடன் என் பெயரை நான் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்று கூறி விலகினார்.
ஆனால் அன்று முதல் இன்று வரை இவரின் இளமை கூடி காணப்படுவதால் அவரின் அழகின் ரகசியம் குறித்து பலரும் அவரிடம் கேட்டு நச்சரிக்கின்றனர். இந்நிலையில், தற்போது ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
அந்தப் புகைப்படத்தில் ஈரம் படிந்த முடியில், ஷர்ட் அணிந்து 50 வயசு உள்ள ஒரு பெண்ணை போல இல்லாமல் எதோ 20 வயசு சின்ன பொண்ணு போல் செம்ம கிளாமராக உள்ளார். இப்போ இருக்குற இளம் நடிகைகள் எல்லாம் கத்துக்கணும்.




