"வலிமை" - தல ஓட்டும் பைக்கின் விலை மற்றும் சிறப்பம்சம் - வியக்க வைக்கும் தகவல்கள்..!


நேர்கொண்ட பார்வை படத்தின் சூப்பர் ஹிட்டத்தை தொடர்ந்து அஜித், இயக்குநர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் வலிமை. 
 
நடிகர் அஜித்தின் 59-வது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அஜித் குமார், ஹுமா குரேஷி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் லாக்டவுன் அமலானதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 
 
வலிமை பட ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில், மாஸ் சண்டை காட்சிகளை படமாக்க படக்குழு வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
 
இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், கடந்த சில வாரங்களுக்கு முன் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது.
 
இதில் செம்ம எங் அண்ட் ஃபிட் லுக்கில் தல அஜித் பங்கேற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. ஃபிட்னஸில் வேற லெவலுக்கு மெருகேறி எங் லுக்கில் இருக்கும் தல அஜித்தின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். 
 
சிறு காயத்தால் தற்காலிக ஓய்வில் இருந்தார் அஜித். இந்நிலையில் இப்படம் பற்றிய அப்டேட் எதுவும் கிடைக்காத என ரசிகர்கள் தவித்த நிலையில் பைக்கில் அஜித் சாகசம் செய்யும் போட்டோ ஒன்று வெளியாகி சமூகவலைதளங்களை ஆக்கிரமித்ததோடு, தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.
 
 
தல ஓட்டுன பைக் என்றால் சும்மாவா..? எது என்ன பைக் என்பதில் ஆரம்பித்து .. எவ்ளோ மேலேஜ் தரும் என்பது வரை தேடி கண்டுபிடித்துவிட்டனர் தல ரசிகர்கள். அஜீத் ஒட்டிய அந்த பைக்கின் பெயர் "MV Agusta Brutale 800" ஆகும். இந்த பைக்கின் இந்திய மதிப்பு 16 லட்சம் ரூபாயாம். 
 
இந்த பைக்கில் மணிக்கு 244 கிலோமீட்டர் என்ற வேகம் வரை செல்லமுடியுமாம். 798 CC என்ஜின் கொண்ட இந்த பைக் 18 கிலோமீட்டர் மைலேஜ் தரக்கூடியது. 
 
மொத்தம் 6 கியர்கள் கொண்ட இந்த பைக்கின் சிறப்பம்சம் என்னவென்றால் டாப் கியரில் செல்லும் போது வைப்ரேஷன் என்பதே சுத்தமாக இருக்காது என்பது தான்.

"வலிமை" - தல ஓட்டும் பைக்கின் விலை மற்றும் சிறப்பம்சம் - வியக்க வைக்கும் தகவல்கள்..! "வலிமை" - தல ஓட்டும் பைக்கின் விலை மற்றும் சிறப்பம்சம் - வியக்க வைக்கும் தகவல்கள்..! Reviewed by Tamizhakam on November 28, 2020 Rating: 5
Powered by Blogger.