"எப்படி இருந்த மனுஷன்" - "எதிரிக்கும் இந்த நிலை வர கூடாது" - ராணாவுக்கு சாவு பயத்தை காட்டிய கொடிய நோய்..!


பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனும், தெலுங்கு நடிகருமான ராணா திரையுலகில் ‘லீடர்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் ‘பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். 
 
இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் வெவ்வேறு படங்களில் நடித்து வருகிறார் ராணா. சமீபத்தில்தான் யூடியூப் சேனல் ஒன்றையும் ராணா தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தநிலையில் ராணா தான் கடந்து வந்த பாதையை பற்றி பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது ஆஹா என்ற OTT தளத்தில் நடிகை சமந்தா தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் ராணா கலந்து கொண்டுள்ளார். 
 
இந்தப் பகுதியின் முன்னோட்ட வீடியோ இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதில் ராணா, ‘வாழ்க்கை மிக வேகமாக போய்க் கொண்டிருக்கும் போது ஒரு நிறுத்தம் வந்தது. எனக்கு பிறந்ததிலிருந்தே ரத்த அழுத்தம், இதயத்தை சுற்றி கால்சியம் அடைப்பு போன்ற சில உடல் உபாதைகள் இருந்தன. 
 
சிறுநீரக செயல்பாட்டிலும் பாதிப்பு இருந்தது. இதன் காரணமாக 70 சதவிகிதம் ரத்தக்கசிவுகான பக்கவாதம் வருவதற்கு வாய்ப்புகளும் இருந்தன. எனக்கு மரண பயத்தை அந்த நோய்கள் காட்டின’ என்று குறிப்பிட்டிருக்கிறார். 30% உயிர் இல்லாத உடலாக தான் இருந்தேன். 
 
இதனைத் தொடர்ந்து சமந்தா அந்த வீடியோவில், ராணாவை சுற்றியிருப்பவர்கள் மனமுடைந்து இருந்தாலும் ராணா ஒரு பாறை போல் வழுவாக இருந்தார் என்றும், அதை தன் கண்ணாலேயே பார்த்திருப்பதாகவும், ராணா உண்மையிலேயே சூப்பர் ஹீரோ என்றும் கூறியிருக்கிறார். 
 
எனவே ராணா தன்னுடைய உடல்நிலையை பற்றி பேசியிருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு, அவருடைய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

"எப்படி இருந்த மனுஷன்" - "எதிரிக்கும் இந்த நிலை வர கூடாது" - ராணாவுக்கு சாவு பயத்தை காட்டிய கொடிய நோய்..! "எப்படி இருந்த மனுஷன்" - "எதிரிக்கும் இந்த நிலை வர கூடாது" - ராணாவுக்கு சாவு பயத்தை காட்டிய கொடிய நோய்..! Reviewed by Tamizhakam on November 27, 2020 Rating: 5
Powered by Blogger.