"ஏம்மா.. உன் வயசு என்ன..? - அந்த பையன் சைசு என்ன..?" - படுக்கையறை காட்சியில் ஸ்ருதி - விளாசும் ரசிகர்கள்..!

 
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் கைவசம் ஒரு படம் கூட இல்லை. இதற்கு முழு முதற்காரணம், இடையில் சினிமா வாழ்கையை விட்டுவிட்டு தன்னுடைய சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தியது தான். 
 
வெளிநாட்டுகாரர் ஒருவரை காதலித்து வந்தார் ஸ்ருதிஹாசன். இவருடன் சுற்றுலா தளங்களுக்கு செல்வது, பட நிகழ்சிகளுக்கு செல்வது என ஜோடி போட்டு சுற்றி வந்தார். 
 
ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை அம்மணியின் காதல் முறிந்து போனது.இதனால்,மனம்உடைந்துபோனார்ஸ்ருதி. சிறுவயதில் இருந்தே நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பேஷனில் அதிக ஈடுபாடு இருந்து வருகின்றது.
 
இவர் படங்கள் மட்டுமின்றி தனியாக நடக்கும் போட்டோஷுட்டிற்கே ஹாலிவுட் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியாக தான் போஸ் கொடுப்பார். அப்படி சமீபத்தில் இவர் ஒரு போட்டோஷுட்டில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். 
 
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. மூன்றுமொழிகளில் பிஸியாக இருந்த நடிகை ஒரு படம் கூட கையில் இல்லாத நிலையில் தற்போது இவருடைய கவர்ச்சி ஆயுதம் கைகொடுத்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். 
 
 
தற்போது 34 வயதாகும் ஸ்ருதிஹாசன் தன்னை விட 9 வயது குறைவான 25 வயது அறிமுக நடிகர் ஒருவருடன் வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சினிமாவிலேயே கவர்ச்சி தாண்டவம் ஆடும் ஸ்ருதி வெப்சீரிஸ் என்றால் சும்மா இருப்பாரா..? இந்த வெப் சீரிஸில் ரொமான்ஸ் காட்சிகள் நிறையவே இருக்கின்றதாம். 
 
மேலும், படுக்கையறை காட்சி ஒன்றிலும் நடிக்கவுள்ளார் ஸ்ருதி என்று கூறுகிறார்கள். இதனை அறிந்த ரசிகர்கள் ஏம்மா.. உன் வயசு என்ன அந்த பையன் சைசு என்ன என்று வடிவேலு பாணியில் கலாய்த்து வருகிறார்கள்.