சீரியலில் புடவையை சுற்றிக்கொண்டு நடிக்கும் ஸ்ரீதேவியா இது..? - ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்..!

 
வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். தற்போது இவர்களையும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு நிகராக பலர் பார்க்கின்றனர். 
 
இதனால் வெள்ளித்திரையில் இருந்து வாய்ப்பு கிடைத்த பல கதாநாயகிகள் சின்னத்திரை சீரியல் நாயகிகளாக மாறி விடுகிறார்கள்.இந்நிலையில் 'ராஜா ராணி' , 'தங்கம்' ,கல்யாணம் முதல் காதல் வரை' , உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளவர் நடிகை ஸ்ரீதேவி. 
 
நடிப்பை தவிர்த்து, நாய்களை பாதுகாக்கும் அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார்.கடந்த வருடம் அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், திருமணத்தை தொடர்ந்தும் சீரியல்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.சீரியல்களில் பிசியாக இருந்தாலும் வீடியோக்களில் ஆட்டம் போட்டும், கணவருடன் ஜாலியான போட்டோ சூட்டிலும் பிசியாக இருந்து கொண்டிருக்கிறார் ஸ்ரீதேவி அசோக்.
 
சின்னத்திரை நடிகைகளில் செம உற்சாகமாக, எப்போதும் எனர்ஜியுடன் காணப்படுவோரில் ஸ்ரீதேவிக்கும் முக்கிய இடம் உண்டு. அவர் இருக்கும் இடம் எப்பவுமே கலகலப்பாக இருக்கும்.
 
இவர் புதுக்கோட்டை சரவணன் படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் அந்த படத்தில் சின்ன ரோலில் இவர் நடிப்பு அவ்வளவாக வெளியே தெரியவில்லை அதன் பிறகு கிழக்கு கடற்கரை சாலையிலும் நடித்திருக்கிறார். திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால் சீரியல்களில் களமிறங்கினார். 
 
 
செல்லமடி நீ எனக்கு சீரியலில் மீனா கேரக்டரில் முதல் முதலில் அறிமுகமானார்.சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் வீட்டில் கணவருடன் சேர்ந்து சமையல் பண்ணுவது வீட்டை சுத்தம் பண்ணுவது என்று கலக்கவும் செய்கிறார். 
 
 
பொதுவாக சீரியல் நடிகைகள் புடவை சகிதமாகவே காட்சி தருவார்கள். ஆனால், சமீப காலமாக அந்த நிலை மெல்ல மெல்ல மாறி வருகின்றது. சினிமா நடிகைகளுக்கு இணையாக இறங்கி கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகைகளும் இருக்கிறார்கள். 


இந்நிலையில், ஸ்ரீதேவி மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

சீரியலில் புடவையை சுற்றிக்கொண்டு நடிக்கும் ஸ்ரீதேவியா இது..? - ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்..! சீரியலில் புடவையை சுற்றிக்கொண்டு நடிக்கும் ஸ்ரீதேவியா இது..? - ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on November 02, 2020 Rating: 5
Powered by Blogger.