ரொம்ப நேரம் பண்ணு.. படுக்கையில் இளைஞரை வற்புறுத்திய 56 வயது பெண்.. அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்த மகள்..

பெங்களூரு, ஏப்ரல் 24 (புதுப்பிப்பு 17 டிசம்பர், 2025) : கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஒரு பரபரப்பான கொலை சம்பவம் நகரையே உலுக்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான 56 வயது பெண்ணை, பாலியல் உறவின் போது "நீண்ட நேரம் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியதால்" ஆத்திரமடைந்த இளைஞர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்த இளைஞர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் இளம் ஊழியர் என்பது கூடுதல் திடுக்கிடும் தகவல். கொடிகேஹள்ளி அருகே பத்திரப்பா லேஅவுட்டில் தனியாக வசித்து வந்தவர் ஷோபா (வயது 56).

கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வந்த இவருக்கு இரண்டு மகள்கள். இரு மகள்களும் திருமணமாகி அருகிலேயே தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வந்தனர். இரு மகள்களும் அவ்வப்போது தாயை சந்தித்து செல்வது வழக்கம்.

கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஷோபாவின் மூத்த மகள் தாயை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். பலமுறை அழைத்தும் போன் எடுக்கப்படவில்லை. சந்தேகமடைந்த மகள் நேரடியாக வீட்டுக்கு சென்றார். வீட்டுக்கதவு திறந்த நிலையில் இருந்தது அதிர்ச்சி. உள்ளே சென்று பார்த்த போது... தாய் ஷோபா உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நிர்வாண நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்!

அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்த மகளின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனடியாக கொடிகேஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் ஷோபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். போலீசார் ஷோபாவின் செல்போன் ரெக்கார்டுகளை ஆராயன்தனர். கடைசியாக யார் வீட்டுக்கு வந்தார்கள் என்ற விபரத்த அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை.

கடைசியாக, ஷோபாவின் கைப்பேசியில் இருந் சமூக வலைத்தள கணக்குகளை ஆராய்ந்தனர். அப்போதுதான் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஹோரேஹள்ளி பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் நவீன் கவுடா (வயது 24-28) என்ற இளைஞருடன் ஷோபா இன்ஸ்டாகிராம் மூலம் நெருக்கமாக பழகி வந்தது தெரியவந்தது.

இருவரும் அடிக்கடி வரம்பு மீறிய மெசேஜ்களை பரிமாறியுள்ளனர். மேலும், அவ்வப்போது, வீடியோ காலும் பேசி வந்தனர். மட்டுமில்லாமல், ஷோபா வீட்டு பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், நவீன் அடிக்கடி அந்த வீட்டுக்கு வந்து சென்றது உறுதியானது. உடனடியாக நவீனை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நவீன் அதிர்ச்சி தரும் வாக்குமூலம் அளித்தார். "இன்ஸ்டாகிராம் மூலம் ஷோபாவுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது தகாத உறவாக மாறியது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் செய்வது வழக்கம். சம்பவத்தன்று, உடனே உன்னை பாக்கணும் போல இருக்கு.. சீக்கிரமா வா.. என்று கூறினார். நானும் சென்றேன், வீட்டில் இருவரும் உறவு கொண்டோம். அதன் பிறகு, நான் வீட்டுக்கு கிளம்ப தயாரானேன்.

அப்போது, என்னை செல்ல விடாமல், என்னுடன் நீண்ட நேரம் உல்லாசமாக இரு.. இன்னும் கொஞ்ச நேரம் பண்ணு.. வா.. என என்னை வற்புறுத்தினார். இதனால், எங்களுக்குள் வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தில் அவரை கொலை செய்தேன்" என்று ஒப்புக்கொண்டார்.

கொலைக்கு பிறகு ஷோபாவின் டெபிட் கார்டை எடுத்துக்கொண்டு ஏடிஎம்களில் பணம் எடுத்ததும், அவரது காரை தூரமாக கொண்டு போய் நிறுத்திவிட்டு வந்ததும் தெரியவந்தது. இந்த கொடூர செயலால் பெங்களூரு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போலீசார் நவீன் கவுடாவை கைது செய்து பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் ஏற்படும் பழக்கங்கள் எப்படி ஆபத்தானவை என்பதை மீண்டும் நினைவூட்டியுள்ளது.

தனியாக வாழும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்வியையும் எழுப்பியுள்ளது. பெங்களூரு மக்கள் இந்த கொடூர கொலையால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்!

Summary in English : In Bengaluru, a 56-year-old widow named Shoba was murdered by Naveen Gowda, a young IT employee she met on Instagram. Their online friendship turned into an illicit affair. During a sexual encounter, an argument arose when Shoba allegedly insisted on prolonging the act, leading Naveen to kill her in rage. He was arrested after police traced him via CCTV and digital records.