காதலனுக்காக பண மூட்டையை தயாராக வைத்திருக்கும் நடிகை - எதற்கு தெரியுமா..?


தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாகவும், இளம் நடிகைகளுக்கு ஒரு ரோல் மாடலாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார் அந்த நம்பர் நடிகை. சினிமாவுக்குள் புதிதாக வரும் நடிகைகள் பலரும் நான் அந்த நடிகை போல வளர வேண்டும் என்று தான் கூறுகிறார்கள். 
 
இப்படி, ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின் சென்ட்ரிக் படங்களிலும் நடித்து கல்லா கட்டியுள்ளார் அம்மணி. வயதானாலும், இன்றும் பலருக்கு கனவு கன்னியாக பவனி வருகிறார் அம்மணி. 
 
பலருக்கு கனவு கன்னியாக இருக்கும் இவருக்கு இருப்பதோ ஒரே ஒரு கனவு கண்ணன் தான். பல காதல் முறிவுகளுக்கு பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பிரபல இளம் இயக்குனர் ஒருவருடன் காதலில் இருக்கிறார் அம்மணி. 
 
இயக்குனராக பல ரசிக்கும்படியான படங்களை கொடுத்துள்ள தனது காதலனை ஹீரோவாக்கி பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். ஆம், இவருக்காக பல இயக்குனர்களின் கதை கேட்டு வருகிறாராம் அம்மணி. 
 
ஆனால், இந்த படம் ஹிட் ஆகும் என்று நினைக்கும் அளவுக்கு இன்னும் நல்ல கதை அமையாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார் அம்மணி. நல்ல கதை மற்றும் இயக்குனர் அமைந்து விட்டால் தன்னுடைய சொந்த பணத்தை போட்டு படத்தை தயாரிக்க பண மூட்டையை கட்டி வைத்துக்கொண்டிருக்கிறாராம். 
 
அம்மணியின் கனவு கை கூட அந்த மூக்குத்தி அம்மன் தான் அருள் புரிய வேண்டும்..!

காதலனுக்காக பண மூட்டையை தயாராக வைத்திருக்கும் நடிகை - எதற்கு தெரியுமா..? காதலனுக்காக பண மூட்டையை தயாராக வைத்திருக்கும் நடிகை - எதற்கு தெரியுமா..? Reviewed by Tamizhakam on November 30, 2020 Rating: 5
Powered by Blogger.