கமல்ஹாசனின் "மருதநாயகம்" படத்தில் புது ஹீரோ இவர் தான்..! - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!


கமல்ஹாசன் கனவு படமான மருதநாயகம் படவேலைகள் 1997-ல் தொடங்கப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது. பட்ஜெட் மற்றும் சர்வதேச அளவிலான வினியோக சந்தை நிலவரம் உள்ளிட்ட சில காரணங்களால் படப்பிடிப்பை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. 
 
இப்போது, ஏற்கனவே படமாக்கப்பட்ட காட்சிகளை தொடர்ந்தால் அதில் நடித்தவர்கள் தோற்றம் மாறி இருக்கும் என்ற பிரச்சினை எழுந்தது. இதுகுறித்து கமல்ஹாசன் கூறும்போது, மருதநாயகம் படம் வரும். ஏற்கனவே, 30 நிமிட காட்சிகளை எடுத்து விட்டேன். 
 
அதுதான் படத்தின் கடினமான பகுதி என்பதால் முதலில் அதை முடித்து விட்டேன். அதன்பிறகு 12 ஆண்டுகளுக்கு பிறகு என்றுதான் காட்சிகள் விரிகின்றன. எனவே தோற்றம் பற்றிய பிரச்சினைகள் வரவாய்ப்பில்லை. 
 
வந்தாலும் கிராபிக்ஸ்-ஐ புகுத்தி சரி செய்து விடலாம்.” என்றார். இந்த நிலையில் மருதநாயகம் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை நீங்கள் அறிவீர்கள். 
 
இந்நிலையில், “மருதநாயகம் படம் மீண்டும் தயாராகும். எனக்கு அரசியல் பணிகள் இருப்பதால் மருதநாயகம் படத்தில் நான் இருக்க மாட்டேன். எனக்கு பதில் வேறு நடிகர் இருப்பார்” என்றார். இதன்மூலம் மருதநாயகம் படத்தில் இருந்து விலகுவதை கமல்ஹாசன் உறுதிப்படுத்தி உள்ளார். 
 
வேறு நடிகரை வைத்து பட வேலைகள் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது. கமலுக்கு பதில் விக்ரம் நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின. கடாரம் கொண்டான் படத்தை தயாரித்த நடிகர் கமல்ஹாசன், விக்ரம் நடிப்பை பெரிய அளவில் பாராட்டினார்.
 
தற்போது விக்ரம் மருதநாயகமாக நடிப்பார் என்ற தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தை வாயை பிளக்க வைத்துள்ளது. இது குறித்தஅதிகாரபூர்வதகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகின்றது.

கமல்ஹாசனின் "மருதநாயகம்" படத்தில் புது ஹீரோ இவர் தான்..! - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! கமல்ஹாசனின் "மருதநாயகம்" படத்தில் புது ஹீரோ இவர் தான்..! - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! Reviewed by Tamizhakam on November 27, 2020 Rating: 5
Powered by Blogger.