இரட்டை அர்த்தத்தில் பிறப்புறுப்பை குறிப்பிட்டு விமர்சித்த விஷமிகள் - கஸ்தூரி பதிலடி..!


பிரபல நடிகை கஸ்தூரி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள், சமூகவலைதளங்களில் தாறுமாறாக வைரலாகியுள்ளது. 
 
தமிழ் சினிமாவின் அத்தனை நடப்புகளையும் மிச்சம் வைக்காமல் கலாய்த்து, ரஜினிகாந்த் முதல் நேற்று வந்த நடிகர்கள் வரை கிண்டலடித்து வெளிவந்த ’தமிழ்ப்படம்’ ரசிகர்களின் பிரமாண்ட வரவேற்பை பெற்றதுடன், வசூலில் சக்கைப்போடு போட்டது. 
 
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்த இந்தப் படத்தில் பிரபல நடிகை கஸ்தூரியும் தன் பங்குக்கு ”குத்துவிளக்கு” பாடலுக்கு குத்தாட்டம் போட்டு, ரசிகர்களை குதூகலப் படுத்தினார். 
 
தமிழ் சினிவில் 90ஸ் கால கட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுடனும் கைகோர்த்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. 
 
தற்போது 44 வயது ஆன போதிலும் ஒல்லியான உடலமைப்பை கொண்டு 20 வயது இளம்பெண் போன்று கவர்ச்சியாக சுற்றி வருகிறார். மேலும் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி அவ்வப்போது சர்ச்சையாக விடயங்களை பதிவிட்டு சமூகவலைத்தள வாசிகளின் விமர்சனத்துக்குள்ளாவார். 
 
அதனாலே இவருக்கு ட்விட்டர் கஸ்தூரி என்ற அடைமொழியும் உண்டு. அந்த வகையில் சமீபத்தில் கூட விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை வம்பிழுத்தார். தற்பொழுது நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு தினமும் பல்வேறு அவஸ்தைகளை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். 
 
இந்நிலையில் நமது மக்களுக்கு பொழுதுபோக்கு என்றாலே டிவியும் இணையதளமும் தான். இதை தனக்கு ஆயுதமாக பயன்படுத்தி கொண்ட பல்வேறு பிரபலங்கள் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
 
இதில் கஸ்தூரி கொஞ்சம் வித்தியாசம், கவர்ச்சி காட்டுவது மட்டுமல்லாமல், பொது விஷயங்கள் மற்றும் அரசியல் குறித்தும் கருத்து தெரிவித்துவருகிறார். இந்நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் அரசியல் கட்சியில் நான் இணைவேன் என்று கூறியிருந்தார் அம்மணி.
 
இதனை பார்த்த ஒரு குறிப்பிட்ட அமைப்பை சார்ந்தவர்கள் சமூக வலைதளத்தில் இரட்டை அர்த்த வார்த்தைகளால் கஸ்தூரியின் பிறப்புறுப்பை தரக் குறைவாக விமர்சித்துள்ளனர். 
 
 
இதனை பார்த்த கஸ்தூரி "இது தற்செயலா? இல்லை திட்டமிட்ட தாக்குதலா? எனக்கு இஸ்லாமிய உடன்பிறப்புக்கள் உண்டு. இது போன்ற தாக்குதல்கள் என்னை பாதிக்காவிடினும் உங்களை போன்றவர்களால் என்னை நேசிக்கும் மதிக்கும் முஸ்லீம் சொந்தங்களுக்கு மிகவும் வருத்தம். May Allah grant you good sense." என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இரட்டை அர்த்தத்தில் பிறப்புறுப்பை குறிப்பிட்டு விமர்சித்த விஷமிகள் - கஸ்தூரி பதிலடி..! இரட்டை அர்த்தத்தில் பிறப்புறுப்பை குறிப்பிட்டு விமர்சித்த விஷமிகள் - கஸ்தூரி பதிலடி..! Reviewed by Tamizhakam on November 19, 2020 Rating: 5
Powered by Blogger.