நடிகை லைலாவை தொடர்ந்து கன்னக்குழி அழகுக்கு பெயர் போனவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. தமிழ் திரைப்படங்களின் மூலம் அறிமுகமான இவர் இப்பொழுது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என செம பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார்.
விஷால் நடிப்பில் ஆக்சன் திரைப்படமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சக்ரா திரைப்படத்தில் நடித்து வரும் ஸ்ருஷ்டி டாங்கே தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துவருகிறார்.
சமீபத்தில் சேரன் நடிப்பில் வெளியான ராஜாவுக்கு செக் திரைப்படத்தில் நினைத்திருந்த ஸ்ருஷ்டி டாங்கே தற்பொழுது கண்ணைக் கவரும் வகையில் கலர் கலராக உடை அணிந்தவாறு பீச்சில் எடுத்த கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்து அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் செமயாக கலாய்த்து வருகின்றனர்.
இவரின் நடிப்பில் வெளியான மேகா, டார்லிங், கத்துக்குட்டி மற்றும் வில் அம்பு உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு சிறந்த நடிகை என்ற பெயரை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத்தந்த நிலையில், இவர் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே வருகிறது.
பட வாய்ப்பு இல்லை என்றால் பல நடிகைகள் போட்டோஸ் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம், நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அதையும் செய்துவந்தார், சமீபகாலமாக இவர் கொஞ்சம் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.





