தென்னிந்தியாவின் “சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவரகள், இந்திய திரைப்படத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் ஆவார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.தன்னுடைய ஐந்தாவது வயதில், தாயை இழந்த ரஜினிகாந்த் அவர்கள், பெங்களூரில் உள்ள “ஆச்சாரியா பாடசாலை” மற்றும் “விவேகானந்த பாலக சங்கத்தில்” பள்ளிப்படிப்பை முடித்தார்.
சிறு வயதிலேயே பயம் இல்லாதவாராகவும், துணிச்சல் மிக்கவராகவும் இருந்தார். பள்ளிப்படிப்பை முடித்தப் பிறகு, ஒரு நடத்துனராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய அவர், பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.
காலப்போக்கில், நடிப்பின் மீது ஏற்பட்ட ஆவலால், நடிகராகும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்து சேர்ந்தார்.தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல், உலக திரைப்படத்துறையில் பஞ்ச் டயலாக்ஸ் என்றால், அனைவரின் மனத்திலும் நினைவுக்கு வருபவர், ரஜினிகாந்த் மட்டுமே.
ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய ஸ்டைலான நடிப்பிலும், பஞ்ச் டயலாக்குகள் மூலமும் ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது. அவர் வெளிபடுத்திய ஒவ்வொரு டயலாக்கும் இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்றுள்ளது.






