"சூரரைப் போற்று" வாய்ப்பு சும்மா ஒன்னும் கிடைக்கல - போட்டு உடைத்த அபர்ணா முரளி..!


நடிகர் சூர்யா, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்த 'சூரரை போற்று ' திரைப்படம், கண்டிப்பாக திரையரங்குகள் திறந்த பிறகு தான் ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில், 'சூரரை போற்று' திரைப்படத்தை அமேசான் தளத்தில் வெளியிட்டார் நடிகர் சூர்யா.
 
எடுத்த எடுப்பிலேயே ‘சூரரைப் போற்று’ படத்தில் நம்மைக் கவரும் அம்சம் அதன் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பு. தமிழ்ப் படத்திற்கு உரிய இலக்கணங்கள் பலவற்றை முறியடித்திருக்கிறது இந்த திரைப்படம். சின்னச் சின்ன காட்சிகளாக படம் வேகமாக பரபரப்புடன் நகர்கின்றது. 
 
எங்கேயும் தொய்வில்லை. வழக்கமான கட்டிப்பிடித்து காதல் செய்யும் பாடல்கள் இல்லை. அதேசமயம் கணவன், மனைவிக்கிடையிலான காதல், அன்பு, குடும்ப சிக்கல்கள் மிக இயல்பாக சம்பவங்கள் மூலம் காட்டப்படுகின்றன. 
 
தாய் மகன் பாசம், தந்தை மகன் பிணக்குகள், நட்பு, குடும்ப உறுப்பினர்களின் கலகலப்புகளையும், இயல்பாக கலந்து பரிமாறியிருக்கிறார்கள்.கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் என்ற கேரக்டரிலும், அபர்ணா பாலமுரளி பொம்மி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
 
தமிழ் சினிமாவின் வழக்கமான லூசுப் பெண் கதாபாத்திரம் போன்று இல்லாமலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார் பொம்மியாக அபர்ணா பாலமுரளி. படத்தின் இயக்குநர் அபர்ணா பாலமுரளி என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக ஆணாதிக்க சமூகம் பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். 
 
அதை தனது நடிப்பால் சாத்தியப்படுத்தி, சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கையும் அளித்துள்ளார்.சூர்யாவின் நடிப்புக்கு ரசிகர்களிடம் எவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்கிறதோ, அதற்கு சற்றும் குறையாமல் அபர்ணா பாலமுரளியையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 
 
சிலர் ஒருபடி மேலேபோய் இப்படி ஒரு பெண் தன் வாழ்க்கையில் வர வேண்டும் என்று நினைப்பதை சமூகவலைதள பதிவுகளின் மூலம் நம்மால் அறிய முடிகிறது.
 
8 தோட்டாக்கள், ஜி.வி. பிரகாஷின் சர்வம் தாள மயம் என இரண்டு தமிழ் படங்களிலும், ஏகப்பட்ட மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ள அபர்ணா பாலமுரளிக்கு சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு சும்மா ஒன்றும் கிடைக்கவில்லையாம். 
 
அதற்காக ஏகப்பட்ட ஆடிஷன், மற்றும் பயிற்சி வகுப்புகள் என அனைத்து பரிசோதனைகளிலும் பாஸ் ஆன பிறகு தான் சுதா அபர்ணா பாலமுரளியை பொம்மியாக செலக்ட் செய்துள்ளார். இதனை சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அபர்ணா பாலமுரளி.

"சூரரைப் போற்று" வாய்ப்பு சும்மா ஒன்னும் கிடைக்கல - போட்டு உடைத்த அபர்ணா முரளி..! "சூரரைப் போற்று"  வாய்ப்பு சும்மா ஒன்னும் கிடைக்கல - போட்டு உடைத்த அபர்ணா முரளி..! Reviewed by Tamizhakam on November 19, 2020 Rating: 5
Powered by Blogger.