"மாஸ்டர்" படக்குழு செய்த வேலையால் நொந்து போன விஜய் ரசிகர்கள்..!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாஸ்டர்’. 
 
அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா ஊரடங்கால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. 
 
இதனிடையே ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை மறுத்த படக்குழு திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என்று கூறியிருந்தது. இதையடுத்து நவம்பர் 10-ம் தேதி திரையரங்குகளை திறக்க தமிழக அனுமதி அளித்தாலும் 50% இருக்கைகளை நிரப்புவதற்கு மட்டுமே ஒப்புதல் அளித்திருக்கிறது. 
 
எனவே தீபாவளிக்கு மாஸ்டர் படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு, திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அரசு அனுமதி அளிக்கும் போது படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது இந்தப்படத்தின் ஆன்லைன் ரிலீஸ் உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் விலைக்கு வாங்கியிருக்கிறது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

 
இதனால், வரும் பொங்கல் பண்டிகையன்று மாஸ்டர் திரைப்படம் NETFLIX-ல் வெளியாகும் என கூறப்படுகின்றது. இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் நொந்து போயுள்ளனர்.

"மாஸ்டர்" படக்குழு செய்த வேலையால் நொந்து போன விஜய் ரசிகர்கள்..! "மாஸ்டர்" படக்குழு செய்த வேலையால் நொந்து போன விஜய் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 27, 2020 Rating: 5
Powered by Blogger.