"இந்த ஒரே காரணத்துக்காக தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகின்றது.." - போட்டு உடைத்த VJ சித்ரா..!


சீரியல் தொடர்களில் நடிக்க நடிகைகள் கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்க வேண்டும் என்கிற காலம் மாறிப்போய், தற்போது கலராக இருந்தால் மட்டும் போதும், மொழி தெரியாவிட்டாலும் அவர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்து நடிக்க வைத்து விடலாம் என நினைக்கின்றனர் சீரியல் இயக்குனர்கள். 
 
அப்படி வாய்ப்பு பெற்று பிரபலமாகும் நடிகைகள் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியில் இறங்கி இணையத்தை கலக்குவதையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். 
 
அந்த வகையில் சமீப காலமாக தமிழ் சீரியல்களில் கேரளா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த நடிகைகள் அதிக அளவில் நடித்து வருகின்றனர். இதுகுறித்து மிகவும் கோபமாக பேசியுள்ளார் 'நாச்சியார்', பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல் தொடர்களில் நடித்துவரும் நடிகை சித்ரா. 
 
இது குறித்து வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள சித்ரா. பல சீரியல்களில் தமிழ் பெண்களுக்கு வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. கேரளா, கர்நாடகா, என வேறு மாநில பெண்கள் வெள்ளையாக இருக்கின்றனர் என்ற ஒரே காரணத்திற்காக, தமிழ் சீரியல்களில் அவர்களை ஒப்பந்தம் செய்கின்றனர். 
 

 
ஆனால், நான் ரொம்ப கலர் கிடையாது, டஸ்கி கலர் தான் ஆனால் இதுவும் அழகு தானே. நம்ம ஆளுங்க ஏன் வெள்ளையா இருக்குற பெண்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என தெரிவியவில்லை என்று கூறியுள்ளார்.
 
இந்த ஒரே காரணத்துக்காக மட்டுமே தமிழ் நடிகைகளின் வாய்ப்பு மறுக்கப்படுகின்றது என்று கோபமாக பேசியுள்ளார்.

"இந்த ஒரே காரணத்துக்காக தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகின்றது.." - போட்டு உடைத்த VJ சித்ரா..! "இந்த ஒரே காரணத்துக்காக தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகின்றது.." - போட்டு உடைத்த VJ சித்ரா..! Reviewed by Tamizhakam on November 26, 2020 Rating: 5
Powered by Blogger.