"என்ன ரெண்டும் ஒரே மாதிரியே இருக்கு.." - திரிஷாவின் 16 வயது புகைப்படம் - குழம்பி போன ரசிகர்கள்..!

 
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, இப்போதும் பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருக்கிறார். இவரது நடிப்பில் உருவான "ராங்கி" என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.
 
இந்நிலையில், முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், நடிகை திரிஷாவின் இந்த படத்துக்கு உதவி உள்ளார். எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் சரவணன், அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘ராங்கி’. 
 
இப்படத்திற்கான கதை மற்றும் வசனத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருக்கிறார். ‘ராங்கி’ என்றால் அடங்காத, துணிச்சல் மிகுந்த பெண் என்று பொருள். படத்தில் நிறைய சண்டை காட்சிகள் உள்ளன. 
 
இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்த படத்தின் சிங்கிள் டிராக்காக ‘பனித்துளி’ எனும் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. 
 
சத்யா இசையில் சின்மயி பாடியிருக்கும் இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். மேலும் அவர் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். பாடலை வெளியிட உதவிய நடிகர் சிவகார்த்திகேயனுக்கு டுவிட்டரில் திரிஷா நன்றி தெரிவித்தார்.
 

என்ன ரெண்டும் ஒரே மாதிரியே இருக்கு

 

இப்படி ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து தன்னால் தனியாகவும் சாதிக்க முடியும் என காட்டிக்கொள்கிறார் திரிஷா.  இந்நிலையில், இவருடைய இளம் வயது புகைப்படம் மற்றும் நடிகை ரீமா சென்னின் இளவயது புகைப்படம் இரண்டையும் ஒப்பிட்ட ரசிகர்கள் என்ன ரெண்டும் ஒரே மாதிரியே இருக்கு.. என்று குழம்பி போய் மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

"என்ன ரெண்டும் ஒரே மாதிரியே இருக்கு.." - திரிஷாவின் 16 வயது புகைப்படம் - குழம்பி போன ரசிகர்கள்..! "என்ன ரெண்டும் ஒரே மாதிரியே இருக்கு.." - திரிஷாவின் 16 வயது புகைப்படம் - குழம்பி போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on December 16, 2020 Rating: 5
Powered by Blogger.