" போடா போடி 2" - ஹீரோயின் யாரு தெரியுமா...?
நயன்தாராவின் காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய முதல் படம் 'போடா போடி'. சிம்பு, வரலட்சுமி நடித்தனர். இப்படம், நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான "துப்பாக்கி" படத்துடன் வெளியான போதிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தற்போது இரண்டாம் பாகம் உருவாகிறது. நடிகர் சிம்புவே ஹீரோவாக தொடர, நாயகியாக ஹிந்தி நடிகை ரித்திகா பால் நடிக்கிறார். ஆனால், இதில் ட்விஸ்ட் என்னவென்றால் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்பது தான்.
வேறு ஒருவர் இயக்க இருப்பதாக தயாரிப்பாளர் பதம் குமார் தெரிவித்துள்ளார். முதல்பாகம் போன்றே இரண்டாம் பாகமும் நடனத்தை மையப்படுத்தியே இருக்கும் என தெரிகிறது. அடுத்தாண்டு மே முதல் லண்டனில் முழு படத்தையும் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
உடல் எடை ஏறி குண்டாக இருந்த நடிகர் சிம்பு நடனமாட மிகவும் கஷ்டப்பட்டேன் என வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளியான போது கூறினார்.
ஆனால், தற்போது உடல் எடை குறைத்து பழைய பன்னீர் செல்வமாக செம
ஃபார்மில் இருக்கிறார். உடல் எடை குறைத்த கையுடன் "ஈஸ்வரன்" என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்தும் விட்டார். அட நெசமா தான் பா..!
போடா போடி 2 படத்தில் தன்னுடைய முழு நடன திறமையையும் இறக்கி வைப்பார் என எதிர்பார்க்கலாம். ஷாருக்கான், அனுஷ்கா ஷர்மா நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி சக்கை போடு போட்ட ரப் தே பனாதி ஜோடி என்ற படத்தின் தழுவலாக இந்த படம் இருக்கலாம் என்ற பேச்சு உலவிக்கொண்டிருகின்றது.
ஆனால், படத்தின் கதை குறித்த எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
" போடா போடி 2" - ஹீரோயின் யாரு தெரியுமா...?
Reviewed by Tamizhakam
on
December 20, 2020
Rating:
