பணத்துக்காக 51 வயது கிழவியை திருமணம் செய்த 26 வயது இளைஞர் - நண்பர்கள் கிண்டல் - இறுதியில் நடந்த பயங்கரம்..!


பணத்துக்கும், சொத்துக்கும் ஆசைப்பட்டு வயது முதிர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து, பின்னர் கொலை செய்த கேரள இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளது. 
 
கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கோரகோனம் பகுதியை சேர்ந்த ஷஹாகுமாரி மற்றும் அருண் என்ற இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் பெரிய அளவில் இருந்துள்ளது. 
 
51 வயதான ஷஹாகுமாரிக்கும் 26 வயதான அருணுக்கும் இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் கணவன் - மனைவியாக கேரளாவில் உள்ள கோரகோனம் பகுதியில் வாழ்ந்துவந்துள்ளனர். 
 

புகைப்படத்தால் விரக்தி

 
இதனை தொடர்ந்து, இருவருக்கும் நடைபெற்ற திருமணம் முறைப்படி பதிவு செய்யப்படாமல் இருந்துள்ளது. இதனால், திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என ஷஹாகுமார் தனது கணவர் அருண் இடம் கூறியுள்ளார். 
 
இருவரது திருமண புகைப்படங்களும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைதளங்களில் பரவியுள்ளது. இதனை பார்த்த அருணின் நண்பர்கள் பலரும் அவரை கிண்டல் செய்ததாக இந்த விவகாரங்களால் கணவன் - மனைவி இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டுள்ளது. 
 
திருமண புகைப்படம் சமூகவலைதளத்தில் பரவியது, வாக்குவாதம் உள்ளிட்டவற்றால் கோபமடைந்த அருண் தனது மனைவி ஷஹாகுமாரியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். 
 

விபத்து போல கொலை

 
இதற்காக கடந்த இரண்டு வாரங்களாக பல முறை அவரை கொலை செய்ய முயற்சித்துள்ளார். வீட்டில் நடந்த விபத்தினால் அவர் மரணமடைந்து விட்டார் என்பது போல திட்ட தீட்டி பல முயற்சிகளை செய்துள்ளார்.
 
அந்த முயற்சியில் இருந்து ஷஹாகுமாரி தப்பி தப்பி வந்துள்ளார். தன்னை கொலை செய்ய முயற்சித்தது கணவர் அருண் தான் என்ற உண்மை ஷஹாகுமாரிக்கு தெரியாமலேயே இருந்துள்ளது. 
 
இந்நிலையில், ஷஹாகுமாரி நேற்று அவரது வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த உயிரிழப்பு குறித்து சந்தேகம் எழுந்ததால் ஷஹாகுமாரியின் கணவர் அருணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 
 

மின்சாரம் பாய்ச்சி

 
இந்த விசாரணையில், மனைவி ஷஹாகுமாரி மீது மின்சாரம் பாயச்செய்து கொன்றதாக கணவர் அருண் ஒப்புக்கொண்டார். திருமண புகைப்படங்கள் பரவியதாலும், வயது வித்தியாசம், இருவருக்கும் இடையேயான சண்டையாலுமே மனைவி ஷஹாகுமாரியின் உடலில் மின்சாரம் பாய்சசி கொலை செய்ததாக கொன்றதாக ருண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பணத்துக்காக 51 வயது கிழவியை திருமணம் செய்த 26 வயது இளைஞர் - நண்பர்கள் கிண்டல் - இறுதியில் நடந்த பயங்கரம்..! பணத்துக்காக 51 வயது கிழவியை திருமணம் செய்த 26 வயது இளைஞர் - நண்பர்கள் கிண்டல் - இறுதியில் நடந்த பயங்கரம்..! Reviewed by Tamizhakam on December 27, 2020 Rating: 5
Powered by Blogger.